உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

செந்தமிழ்ச் சிறப்பு

கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை

மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ" (திருவிளை. நாட்டுப்.) என்னும் பரஞ்சோதி முனிவர் பாடல் இங்குக் கருதத் தக்கது.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதனூ லாகும்"

(தொல்.1594) என்றவாறு, முற்றத் துறந்த முழுமுனிவரே தமிழிலக்கண முதனூல் இயற்றியவராதலின், தனித்தொலிப்பதும், தனித்தொலியாததும், தனித் தொலிப்பதோடு கூடியொலிப்பதும் ஆகிய மூவகை யொலிகளும், தனி யுயிரையும் தனிமெய்யையும் (உடம்பையும் அல்லது உயிரில்லாப் பொருளையும்) உயிரோடு கூடிய மெய்யையும் முறையே ஒத்திருப்பதால், அவற்றிற்கு உயிர், மெய், உயிர்மெய் என்ற பெயர்களையே உவமையாகு பெயராக இட்டிருக்கின்றனர். அதற்கேற்ப, உயிருக்குப் புள்ளியில்லா வடிவும் மெய்க்குப் புள்ளியுள்ள வடிவும் உயிர்மெய்க்குத் தனிக்கூட்டு வடிவும் இவ் வரிவடிவமைப்பும் முறையென்னும் வரிசையமைப்பும் முதன்முதற் கொண்டெழுந்தது, தமிழ் நெடுங்கணக்கே. அதைப் பின்பற்றியதே சமற்கிருத வண்ணமாலை. அதற்கும் பிந்தினவே, தெலுங்கு கன்னட மலையாளத் தென்னாட்டு நெடுங்கணக்குகளும் வங்க குசராத்தி வடநாட்டு நெடுங்கணக்குகளும். தமிழெழுத்து, சில தமிழ்ப் பகைவர் கூறுகிறபடி, அசோகன் கல்வெட்டுப் பிராமியெழுத்தினின்று திரிந்த தன்று.

அமைத்திருக்கின்றனர்.

பகுத்தறிவுள்ள மக்களையே உயர்வாகவும் மற்றெல்லாவற்றையும் தாழ்வாகவுங் கொண்டு பொதுமக்களே தமிழ்மொழியை அமைத்து விட்டமையால், இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பும் முறையில், உயர்திணை அஃறிணை என்ற குறியீடுகளை மட்டும் இலக்கண ஆசிரியர் இட்டிருக்கின்றனர்.

பெயர்கட்கு முதன்முதலாக எட்டு வேற்றுமை வகுத்துக் கூறியதும் தமிழிலக்கணமே. அதைப் பின்பற்றியதே சமற்கிருதம். கால்டுவெலார் கருதுகிறபடி தலைமாறாக நிகழ்ந்ததன்று.

9. செய்யுட் சிறப்பு

பண்டைத் தமிழிலக்கியம், உரையும் (Commentary), உரிச்சொற் றொகுதியும் (நிகண்டும்) உட்பட, முற்றும் செய்யுள் வடிவிலேயே இருந்தது. பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்

யாப்பின் வழிய தென்மனார் புலவர்”

என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க.

(1336)