உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழின் தனிப் பெருந்தன்மைகள்

15

காதலும் வழுத்தும்பற்றிப் பாடுதற்குச் சிறந்த கலிப்பாப் போன்ற செய்யுள்வகை, வேறெம்மொழியிலும் காண்பதற்கில்லை.

அகப்பொருட் செய்யுள்களில், பண்டைத் தமிழக நிலையை அறியக் கூடியவாறு செய்திகளை யமைத்துப் பாடும் புலனெறி வழக்கம் என்னும் செய்யுண் மரபு தமிழுக்கே சிறப்பாம்.

ஒவ்வொரு தலைமுறையிலும், கடுத்துப் பாடவும் செய்யுளிலேயே உரையாடவும் வல்ல பல்லாயிரக் கணக்கான புலவர் பண்டைத் தமிழகத் திருந்தனர்.

10. அணிச்சிறப்பு

தாகும்.

பொருளணியில், உள்ளுறையுவமம் தமிழுக்குச் சிறப்பாகவுரிய

சொல்லணியில், திருப்புகழ் போன்ற வண்ணங்களும் ககரப்பாட்டும் தகரப் பாட்டும் போன்ற ஓரெழுத்துப் பாட்டும், வல்லினப் பாட்டும் மெல்லினப் பாட்டும் இடையினப் பாட்டும் ஆகிய ஓரினப் பாட்டும், ஒரே செய்யுளைப் பல்வேறு செய்யுள்களாகப் பகுக்கக் கூடிய பதின்பங்கி (தசபங்கி), நூற்றுப்பங்கி (சதபங்கி) முதலியனவும், ஆழிக்கட்டு (சக்கரபந்தம்), தேர்க்கட்டு (ரதபந்தம்), எண்ணாகப் பிணையல் (அட்டநாக பந்தம்) முதலிய மிறைப்பாக்களும் தமிழிற்போல் வேறெம்மொழியிலும் பாட முடியாது. 11. நூற்சிறப்பு

ஆரிய வருகைக்கு முற்பட்ட ஆயிரக்கணக்கான தனித்தமிழ் இலங்கு நூல்களெல்லாம் அழிந்தும் அழிக்கப்பட்டும் போனபின்பும், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூலும் திருக்குறள் போன்ற அறநூலும், வேறெம்மொழியிலும் இல்லையென்பது வெள்ளிடைமலை.

இத்தகைய விழுமிய நூலையும் வியத்தகு பண்பையுங் கொண்ட உலக முதல் உயர்தனிச் செம்மொழியை, இற்றைத் தமிழன் இனி மேலாயினும் போற்றிக் காத்து முன்னேற முயல்வானாக.

"கழகப் பொன்விழா மலர்" கடகம் 1970