உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழின் தனியியல்புகள்

23

அவ் வேறுபாட்டிற்கு எல்லையின்மையையும், கண்ட இலக்கண நூலார், திருத்தமான வடிவையே அளவைப்படுத்தி அதற்குச் செந்தமிழ் எனப் பெயரிட்டனர்.

இருக்குது, இருக்கு, இக்குது, இக்கு, கீது என வெவ்வேறிடத்தில் வெவ்வேறு வடிவில் வழங்கினாலும், ஏடெடுத்தெழுதும் போதும் மேடையேறிப் பேசும் போதும், இருக்கின்றது அல்லது இருக்கிறது என்னும் வடிவையே ஆளவேண்டுமென்பது, தொல்லாசிரியர் கட்டளையிட்ட செம்மையென்னும் வரம்பாம்.

"மக்கள் தாமே ஆறறி வுயிரே.” “உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே” என்று மக்கள் இயல் வரையறை செய்யப்பட்டிருப்பதால் அதற்கேற்ப எல்லா வினைகளையும் பண்பட்ட முறையில் இயற்றுவதே விலங்கினும் உயர்ந்த நிலைமையைக் காட்டுவ தாகும்.

ஆயினும், இச் செம்மையைத் தமிழளவு ஏனை மொழிகள் பேண இயலாது. தமிழில் வழுநிலையாயிருப்பன பல ஏனைமொழிகளில் வழா நிலையாம். ஆதலால், தென்மொழிகள் தமிழும் திராவிடமும் என இரண்டாகப் பிரித்தறியப்படும். தூய்மையுஞ் செம்மையும் உண்மை யின்மைகளே இதற்குக் கரணியம்.

6. மும்மை

இலக்கிய நிலையில், இசையும் நாடகமும் இயலொடு சேர்க்கப் படுவதால், தமிழ் முத்தமிழ் எனப்படும்.

7. இயன்மை

ஏனை யிலக்கியப் பெருமொழிகளிலும், இலக்கணம் எழுத்தும் சொல்லும் யாப்பும் அணியும் என நாற்கூறே கொண்டது. தமிழிலோ, எல்லாப் பொருள்களையும் அறிவியல் முறையிற் பாகுபடுத்தும் பொரு ளிலக்கணமும் உண்டு.

சிலர், காதலும் போரும் ஆகிய இரண்டையே பொருளிலக்கணங் கூறுமென்பர். அவர் அறியார். காதலல்லாத எல்லாப் பொருள்களும் புறப்பொருளாக வாகைத் திணையுள் அடங்கும்.

8. வியன்மை

சில தமிழ்ச்சொற்கள் உலகெங்கும் பரவியுள்ளன.

எ-டு: அம்மை அப்பன் முதலிய பெற்றோர் பெயர்கள்.

9. வளமை

நீருள்

தெற்கில் ஈராயிரங் கல் தொலைவு நீண்டிருந்த பழம் பாண்டிநாடு மூழ்கிவிட்டதனாற் பல்லாயிரக்கணக்கான உலக வழக்குச்