உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

செந்தமிழ்ச் சிறப்பு

Π

சொற்களும், முதலிரு கழக நூல்களும் அழிக்கப்பட்டுவிட்டதனாற் பல்லாயிரக்கணக்கான இலக்கிய வழக்குச் சொற்களும், இறந்துபட்டு மீளா நிலையடைந்தன.

யினும், இக்காலத்தும், இலை, தாள், தோகை, ஓலை என்னும் நால்வகை இலைப் பெயர்களும்; அரும்பு, போது, மலர், வீ, செம்மல் என்னும் ஐந்நிலைப் பூப்பெயர்களும்; கச்சல் (வாழை), வடு (மா), மூசு (பலா), குரும்பை (தென்னை, பனை) என்னும் பல்வேறு பிஞ்சுகளின் சிறப்புப் பெயர்களும், உள்ளன.

யானையைக் குறிக்க இருபத்தைந்திற்கு மேற்பட்ட பெயர்கள்

உள்ளன.

தொத்துநோய் (Infectious disease), ஒட்டுவாரொட்டி (Contagious disease), திக்குதல் (to stammer), கொன்னுதல் (to stutter) என நுட்ப வேறுபாடு குறிக்கும் ஒருபொருட் பலசொற்களும் நிரம்பவுள்ளன.

இவ் வியல்பை யறியாதார் வடசொற் கடன்கோள் தமிழுக்கு இன்றியமையாத தென்பர். வடசொற் கலப்பால், தென்சொற்கள் வழக் கிறந்தும் வழக்குக் குன்றியும் பொருள் மாறியும் வேர்ப்பொருள் மறைந்தும் இறந்துபட்டுமே போயின. அதனால் தீமையேயன்றி நன்மையில்லை.

எ-டு:

தென்சொல் வழக்கிறத்தல்: சூள், கழுவாய் வழக்குக் குன்றல்: ஆண்டு, மகிழ்ச்சி

பொருள்மாறல்:

உயிர்மெய், தோள்

வேர்ப்பொருள் மறைதல்:

அகங்கரி, பத்தினி

வடசொல்

ஆணை, பிராயச்சித்தம்

வருஷம், சந்தோஷம்

பிராணி, புஜம்

அஹங்கார, பத்நீ

மேலும் வடமொழியென்னும் சமற்கிருதமே ஆயிரக்கணக்கான அடிப்படைச் சொற்களைத் தமிழினின்று கடன் கொண்டுள்ளது. அம் மொழிச் சொற்களுள், ஐந்தி லிருபகுதி தமிழ்; ஐந்தி லொருபகுதி மேலையாரியம்; ஐந்தி லொருபகுதி வடநாட்டுப் பிராகிருதம்; ஐந்தி லொரு பகுதி புதிதாகப் புனையப்பட்டவை. வடமொழித்துணையின்றித் தமிழ் வழங்க முடியும்; ஆயின் தமிழ்த் துணையின்றி வடமொழி வழங்கமுடியாது. என் “The Primary Classical Language of the World” என்னும் நூலைப் பார்க்க.