உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழின் தனியியல்புகள்

10.

இளமை

25

தமிழ் உலக முதற்றாய் மொழியாயிருந்து பதினெண் திராவிட மொழிகளைப் பிறப்பித்தும், ஏறத்தாழ ஐம்பான் ஆரிய மொழிகளைத் தோற்றுவித்தும், இன்றும் இளமையாயிருப்பது, அதன் அழியாத் தன்மையைக் காட்டும். “என்றுமுள தென்றமிழி யம்பியிசை கொண்டான்” என்றார் கம்பர். "ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன், சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே” என்றார் சுந்தரம்பிள்ளை.

உரிமை வேட்கை பொங்கல் மலர் 1974