உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

செந்தமிழ்ச் சிறப்பு சித்திய நிலைக்கு முந்தியதும், அவ் விரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவதற்கு முந்தியதுமான, ஒரு கால நிலைமையைக் காட்டி எஞ்சி நிற்கும் தலைசிறந்த படிநிகரியாகவும் (Representative) கருத ஏது விருப்பதாகத் தோன்றவில்லையா?'

"சில திரவிடச் சொல் வடிவுகளும் வேர்களும் மாந்தரின் முதற் பெற்றோரினின்று முதற்காலத் திரவிடர்க்கு வழிவழியாக இறங்கிவந்துள்ள மொழியியற் பேற்றின் ஒரு கூறாக அமையாவா என்பது வேறொரு வினா. எங்ஙனமிருப்பினும், அத்தகைய மொழியியல் வழிமுறைப் பேற்றின் தடங்களை, மிக எளியனவும் மிகத் தேவையானவும் அதனால் மிக முந்தியனவுமான மொழிக் கூறுகளான சுருங்கிய சூழலில்தான் காண வேண்டியவனாக இருக்கின்றேன்.”

CC

“எங்ஙனமும், உள்ளிருந்து திரவிட மொழிகள் எல்லாவற்றுள்ளும் மிக உயர்வாகப் பண்படுத்தப் பெற்றுள்ள தமிழ் வேண்டுமெனின், வடமொழியை முற்றும் விலக்கித் தனித்து வழங்க மட்டுமன்று, தழைத்தோங்கவுஞ் செய்யும்." திரவிட மொழிக் குடும்பம், சமற்கிருதத்திற்கு முந்தினவும் மிகத் தொன்மை வாய்ந்தனவுமான கூறுகளைப் போற்றிக் கொண்டுள்ளது. சிறப்பாக, அதன் சுட்டெழுத்துகள் சமற்கிருதத்தினின்று கடன் கொள்ளப் பெறாமல் அந்தப் பழைய யாப்பேத்திய அடிகளை ஒத்திருக்கின்றன. அவ் வடிகளினின்றே, சமற்கிருதத்திலும் ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு பல மொழிகளிலும் உள்ள சுட்டுச் சொற்கள் திரிந்துள்ளன.”

இங்ஙனம் கால்டுவெலாரே சென்ற நூற்றாண்டில் திட்டவட்டமாகவும் தெள்ளத் தெளிவாகவும் கூறியிருக்க, அண்மையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற திரவிட மொழியாராய்ச்சி மாநாட்டில், தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்கவியலாதென்றும், அதன் மடியிலேயே வளர்ந்து வந்ததென்றும் 542 திரவிடச் சொற்களே வடமொழியிலுள்ளன வென்றும், வங்கநாட்டுப் பிராமணரும் வடமொழி வெறியரும் தமிழ்ப் பகைவரான தென்னாட்டுப் பிராமணர் தமிழைப்பற்றி ஆங்கிலத்தில் தவறாக எழுதியுள்ளவற்றைப் படித்துத் தமிழறிந்தவருமான பர். சட்டர்சி துணிந்து கூறியுள்ளார். அதையே, பர். தெ.பொ.மீ.யாரும் பிற வையா புரிகளும் பாராட்டிக் கேட்டுக்கொண்டிருந்திருக்கின்றனர்.

திருவனந்தபுரத்துக் கேரளப் பல்கலைக்கழகம் மட்டுமன்றி, தமிழ் நாட்டு முப் பல்கலைக்கழகங்களும் இன்று சட்டர்சியையும், தெ.பொ.மீ. யாரையும் பின்பற்றி நிற்கின்றன. இதற்கு அங்குள்ள தலைமைத் தமிழ்ப் பேராசிரியன்மாரே அடிப்படைக் கரணியம்.

சமற்கிருதம் மேலையாரியமும், பிராகிருதமும் தமிழுங்கலந்த கலவை மொழியென்றும் அதில் ஐந்திலிரண்டு பங்கு தமிழென்னும் உண்மையறிக.

முதன்மொழி 2.7.1971