உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் வேறு, திரவிடம் வேறு

39

"செந்தமிழ் நிலமாவது, வையை யாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும்” என உரைப்ப, இவர் மட்டும்.

"இவ்வாறு உரைத்தற்கு, ஓர் இலக்கணங் காணாமையானும்; வையை யாற்றின் தெற்காகிய கொற்கையும், கருவூரின் மேற்காகிய கொடுங் கோளூரும், மருத யாற்றின் வடக்காகிய காஞ்சியும், தமிழ்திரி நிலமாதல் வேண்டுமாதலானும்; அஃது உரையன்று என்பர் உரைக்குமாறு:

வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத் தமிழ்கூறு, நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி"

என்றமையானும், இதனுள் தமிழ் கூறும் நல்லுலகம் என விசேடித்தமை யானும். கிழக்கும் மேற்கும் எல்லை கூறாது தெற்கெல்லை கூறியவதனாற் குமரியின் தெற்காகிய நாடுகளை யொழித்து வேங்கட மலையின் தெற்கும், குமரியின் வடக்கும், குணகடலின் மேற்கும், குட கடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப” என வரைந்திருத்தல் காண்க.

பாண்டிநாட்டைத் தமிழ்நாடென்றும் பாண்டியனைத் யனைத் தமிழ் நாடனென்றும் உரிச்சொற்றொகுதிகள் (நிகண்டுகள்) விதந்து கூறுவதாலும், தமிழ் வளர்த்த முக்கழகங்களும் வையைக்குத் தெற்கேயே இருந்தமை யாலும்

நல்லரவப்

பாட்டுடைத்து சோமன் வழிவந்த பாண்டியநின் நாட்டுடைத்து நல்ல தமிழ்”

என்று ஔவையார் பாடியிருப்பதாலும், இன்றும் வையைக்குத் தெற்கிலுள்ள நெல்லை மாவட்டத்தில் நல்ல தமிழ் வழங்குவதாலும், செந்தமிழ் நிலத்தை வையைக்கு வடக்கெனக் கூறுவது உரையாசிரியர் அறியாமையையே உணர்த்து மென்க.

திரிசொற்கு இலக்கணங் கூறப் புகுந்த தொல்காப்பியர், ஒருபொருள் குறித்த வேறு சொல், வேறுபொருள் குறித்த ஒரு சொல் எனத் திரிசொல்லை இரண்டாகப் பகுத்தனர். அதற்கு இலக்கணம் கூறிற்றிலர். ஒருபொருட் பல சொல், பலபொரு ளொருசொல், என்னும் இரட்டைப் பகுப்பு, பெயர் வினை யிடையுரி என்னும் நான்கிற்கும் இயற்சொல் முதலிய நான்கிற்கும் பொதுவாதலின், இது திரிசொல்லின் இலக்கணமாகாமை காண்க. இயற் சொல்லைத் “தம்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்” என்று தொல் காப்பியர் கூறியதினாலும், உரையாசிரியரெல்லாம் அருஞ்சொற்களையே திரிசொல்லாக எடுத்துக் காட்டியமையாலும், நன்னூலார், எளிதுணர் பொருளன இயற்சொல் என்றும் அரிதுணர் பொருளன திரிசொல்லென்றும்