உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

எ-கா.

தமிழ்

போயினான்

செந்தமிழ்ச் சிறப்பு

தெலுங்கு

போயினாடு

செப்பு (விடைசொல்)

செப்பு (சொல்)

சொற்றிரிபு

பொருட்டிரிபு

மூங்கில்

வெதுரு (வெதிர்)

தூட (கன்று)

செய்யுட் சொல் புதுச்சொல்

இவற்றுள் பொருள் திரிசொல்லும் செய்யுட் சொல்லும் புதுச் சொல்லும் திசைச்சொல் எனப்படும்.

நால்வகை இலக்கியச்சொல்

தொல்காப்பியர், தொல்காப்பியத்து ஆளப்பட்ட நிச்சல், சாதி, வைசியன், சூத்திரம் என்னும் சொற்கள் போல் அக்காலத் தமிழிலக்கியத்தில் வேண்டாது புகுத்தப்பட்ட ஒருசில வடசொற்களைக் கண்டு, அவையும் தமி ழுக்கு வேண்டுவனவாகப் பிழைபடக் கொண்டு, தமிழிலக்கியச் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்காக வகுத்து.

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே."

'அவற்றுள்

(880)

இயற்சொற் றாமே

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்

தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே.'

(881)

ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி.”

(882)

"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி." வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே."

என நூற்பா இயற்றினார்.

(883)

(884)

இவற்றுள், இயற்சொல் என்பன செந்தமிழ் நாட்டு வழக்கொடு பொருந்தித் தத்தம் பொருளைத் தப்பாது உணர்த்தும் சொல் என்றார் இளம்பூரணரும் தெய்வச்சிலையாரும். செந்தமிழ் நாட்டில் மட்டுமன்றிக் கொடுந்தமிழ் நாட்டிலும் தப்பாது பொருளுணர்த்துவன என்றார், சேனாவரையரும் நச்சினார்க்கினியரும். இவ் ஈருரையும் ஏறத்தாழ ஒன்றே. ஆயின், செந்தமிழ்நிலத் தெல்லையைப் பற்றித் தெய்வச்சிலையார் ஒருவரே ஓரளவு தெளிந்த அறிவுடையவராகத் தோன்றுகின்றார். பிறரெல்லாம்,