உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் வேறு, திரவிடம் வேறு

43

தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தமையாலும், திரவிடம் எனச் சொல்லப்படும் மொழிகளுக்குள் தமிழ் ஒன்றிலேயே பண்டைக் காலத்தில் இலக்கிய மிருந்தமையாலும், முத்தமிழ் வேந்தரான சேர சோழ பாண்டியர் தொன்றுதொட்டுத் தமிழகத்தைப் புகழ்பெற ஆண்டு வந்தமையாலும், முதலாவது, திராவிடம் என்னும் பெயர் தமிழையே சுட்டித் திரவிட மொழிக் குடும்பம் முழுவதையுங் குறித்தது. வேதகாலத்துப் பிராகிருத மொழிகளுள் ஒன்று த்ராவிடீ எனப்பட்டதையும், ஐந்நூறாண்டு கட்கு முன்பிருந்த பிள்ளை லோகார்யசீயர் தமிழிலக்கணத்தைத் 'த்ராவிட சாஸ்த்ரம்' எனக் குறித்திருப்பதையும், காண்க.

திரவிடம் எனப்படும் மொழிகட்குள் தமிழினின்று முதன்முதல் பிறராற் பிரிக்கப்பட்டது. தெலுங்காகும். கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்த குமாரிலபட்டர் திரவிட மொழிக் குடும்பத்தை 'ஆந்த்ர - த்ராவிட பாஷா' என்றார்.

வடுகு என்று தமிழராற் பொதுவாகக் குறிக்கப்பெறும் தெலுங்கு, கி.மு. பன்னூற்றாண்டுகட்கு முன்னரே தனிமொழியாகப் பிரிந்துவிட்டது. இதை, வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும்”, என்னும் சிறுகாக்கை பாடினியார் கூற்றாலும், குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும்”

என்னும் மாமூலனார் கூற்றாலும், அறியலாம்.

"கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்”

என்று சிலப்பதிகாரம் கருநாடகத்தை ஒரு கொடுந்தமிழ் நாடுபோற் குறித் திருப்பதால், இளங்கோவடிகள் காலத்திற் கன்னடம் ஒரு நடை மொழியாக (Dialect) மட்டுமிருந்தமை அறியப்படும். கடைக்கழகக் காலத்தில் வேங்கடம் தமிழக வடவெல்லையா யிருந்ததும் இதை வலியுறுத்தும், பின்பு, 12ஆம் நூற்றாண்டிற்கு முன் (9ஆம் நூற்றாண்டுபோல்) அது தனிமொழியாகி விட்டமை,

வடகலை தென்கலை வடுகு கன்னடம்

இடமுள பாடையா தொன்றி னாயினும்.”

என்னும் கம்பர் கூற்றால் அறியப்படும். இதனாற் கம்பர் காலத்தில் மலை யாளம் தனிமொழியாய்ப் பிரியவில்லை யென்பதும் உணர்த்தப்பெறும்.

17ஆம் நூற்றாண்டிலிருந்த துஞ்சத்து எழுத்தச்சன், 'ஆரிய எழுத்து' என்னும் வடவெழுத்துக் கலந்த நெடுங்கணக்கை மலையாளத்திற்கு வகுத்த பின்னரே, அது தனிமொழியாகப் பிரிந்தது.