உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் வேறு, திரவிடம் வேறு

தமிழ்

3. ஆரியச்சார்பற்ற பண்டை

இலக்கணவிலக்கியமுள்ளது.

4.

இந்திச் சொற்களை ஏற்காதது.

5. தூய்மை, இயக்கம் மேற்கொண்டது.

பிற திரவிட மொழிகள்

பெரும்பாலும் ஆரியச் சார்பான

பிற்கால இலக்கண விலக்கியமே யுள்ளன.

இந்திச் சொற்களை ஏற்பன.

தூய்மையியக்கம் மேற்கொள்ளாதன

45

இதனால், தமிழ் என்றும் தமிழாகவே நிற்க, திரவிடம் திரிந்து ஆரியமாகவும் செய்யும். வடஇந்தியாவிற் சில திரவிட மொழிகள் அரை யாரியமாகவும் முழு ஆரியமாகவும் திரிந்துள்ளன. லதா, பரியா என்னும் இரு திரவிட மொழிகள் அரை யாரியமும் (அரைத் திரவிடம்) அலபீ என்பது முழு ஆரியமும் ஆயினவென்று, 1906-ல் இந்திய மொழிக் கணக்கெடுத்த கிரையர்சன் கூறியுள்ளார். மராட்டியும்,குச்சரமும் (குசராத்தி) பழம் 'பஞ்ச திராவிட' மொழிகளுள் இரண்டாகக் கொள்ளப்பட்டமையும், இன்று அவை ஆரியத்தோ டெண்ணப்படுவதையும், நோக்குக.

வந்தே மாதரம், ஜெய் ஹிந்த், நமஸ்காரம் (நமஸ்தே), வன மகோத்ஸவம், பாரத் சேவக் சங்க், ஆகாசவாணி முதலிய ஆரிய அல்லது இந்திச் சொற்களைப் பிற திரவிட மொழிகள் முழுமனமாய் வரவேற்க, தமிழ் அவற்றைத் தாய்நாடே போற்றி, இந்தியா (நாவலம்) வெல்க. வணக்கம், மரம் நட்டு விழா, இந்திய வூழியக் கழகம், வானொலி என மொழிபெயர்த்தே வழங்கும் திறத்ததாயிருப்பதனாலும், பால் திரைந்து தயிரான பின் மீண்டும் பாலாகாமை போல் தமிழ்த் திரிபான திரவிடம் மீண்டும் தமிழாகாமை யாலும், தமிழல்லாத பிற திரவிட மொழிகளையே திரவிடம் அல்லது திராவிடம் என்றும், தமிழையும் திரவிட மொழிகளையும் ஒருங்கே தமிழியம் (Tamulic) என்றும், இனிமேல் வழங்க வேண்டும்.

தமிழ், தமிழன், தமிழ்நாடு

திரவிட மொழிகள் பெலுச்சித்தானமும் வங்காளமும் வரை பரவியும் சிதறியும் கிடப்பதாலும், தமிழும் திரவிடமும் ஒன்றுசேர முடியாவாறு வேறு பட்டு விட்டமையாலும், ஆந்திர கன்னட கேரள நாடுகள் தனி மாகாணங்க ளாகப் பிரிந்து போனமையாலும், திரவிடர் தமிழரொடு கூட விரும்பாமை யாலும், ஆரியச் சார்பைக் குறிக்கும் திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்னும் சொற்களை அறவே யொழித்து, தூய்மையுணர்த்தும் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும் முழங்கவும் வேண்டும். தமிழன், தமிழனல்லாதான்

எந்நாட்டிலும், மக்கள் பற்றிய இரட்டைப் பகுப்பில், உள்நாட்டு மக்களை முதற் குறிப்பதே மரபும் முறைமையுமாதலால், இனித் தமிழ்நாட்டு