உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

செந்தமிழ்ச் சிறப்பு ககர வொலியின் நுணுக்கமாகிய ஆய்தமொழிந்த (உயிர் பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய) முப்பான் ஒலிகளே, தமிழுக்கு அல்லது செந்தமிழுக்கு உரியவாம். கொடுந் தமிழ் மொழிகளாகிய திரவிட மொழிகளுள், தமிழுக்கு ஏலாதனவும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிப்பனவுமான செயற்கை வல்லொலிகளையும் காண்கின்றோம். இவை ஆரியக் கலப்புற்ற பிற்காலத்து விளைவல்ல; ஏனெனின், தூய திரவிடச் சொற்களிலும் இவ்வொலிகள் சொல்லுறுப்பாக அமைந்துள்ளன.

தமிழ் குடி-Gudi

வேங்கடா

எ-டு :

எந்து (என்னது)

தெலுங்கு

(குடிகை) வெங்க்கட்ட

எந்த்து

தமிழில் சொன்முதல் வராத எழுத்துகள், கொடுந்தமிழில் இலக்கணப் போலித் திரிபு காரணமாகச் சொன் முதல் வருகின்றன.

தமிழ்

எ-டு

இலது

தெலுங்கு லேது ப்ரொத்து

பொழுது

உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கும் ஆரிய அல்லது திரவிட வொலிகளெல்லாம், தமிழிலுள்ள (கசடதப ற) என்னும் வல்லினத்தின் திரிபுகளே. அதனாலேயே, ஐவருக்க முதலில் தமிழெழுத்துகளே அல்லது தமிழொலி யெழுத்துகளே வரையப்படுகின்றன.

ஒரே தமிழ் வல்லிய வெழுத்து, திரவிடத்தில் வெவ்வேறிடத்தில் வெவ்வேறொலியாய்த் திரிவதுண்டு.

எ-டு :

தமிழ் செய்

சால

ஆரியத்திலும் இங்ஙனமே.

தெலுங்கு ச்சேயு

ஜேசு ('தொலினே ஜேஸின') த்ச்சாலா

A.S. berau, L. Fero, gero,

தமிழ்

ரியம்

எ-டு :

பொறு

விதிர்

Gk. Phero, Skt. bhri.

Skt. vithura, Vidhura.

இனி, ஆரிய மொழிகளில் அயற்சொற்களன்றித் தன் சொற்கள்கூட ஒரேயெழுத்தொலியை எடுத்தும் எடுக்காதும் ஆள்வதுமுண்டு.

எ-டு : உரப்பாவொலி

purse

எடுப்பொலி bursar, disburse.