உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செந்தமிழும், கொடுந்தமிழும்

49

இவ்வெடுத்துக் காட்டுகளால், வவ்லின வெழுத்தொலிகட்கெல்லாம் தமிழ் வல்லொலிகளே மூலம் என்பது பெறப்படும்.

"ஐவருக்கத் திடையின் மூன்றும் அவ்வம் முதலும்” என்று பவணந்தியார் கூறியதும் இங்கு நோக்கத்தக்கது.

தோன்றுமேயன்றி,

எடுக்கா வொலியினின்று எடுப்பொலி எடுப்பொலியினின்று எடுக்கா வொலி தோன்றாது. குழந்தை வாயில் எடுக்கா வொலியே முந்தித் தோன்றும். முந்தியல் மாந்தன் குழந்தை போன்றவன். முன்னைத் தமிழன் முந்தியல் மாந்தன்பாற்பட்டவன். ஆகையால், எடுக்கா வொலியே இயற்கையாம். தென்கோடியில் வாழும் அநாகரிக மக்கள் மொழியில் எடுப்பொலிகள் இல்லை. முன்னாரியமாகிய மேலை மொழிகளில் அவை தோன்றிப் பின்னாரியமாகிய சமற்கிருதத்தில் முற்றுகின்றன.

தமிழ்ச் சொற்கள் திரிந்தே கொடுந்தமிழ் தோன்றும். அத்திரிவு : (1) சொற்றிரிபு, (2) பொருட்டிரிபு என இரு வகைப்படும். அவற்றுள், சொற்றிரிபு பல்வேறு வகைய. அவற்றுள் சிலவே ஈண்டுக் காட்டப்படும்.

தமிழ் ஊர்

தெலுங்கு

ஊரு

கண்

கன் னு

நீர்

மீரு

அவன்

வாடு

மாற்றம்

மாட்ட

எழுபது

டெப்பதி

சுருட்டு

சுட்டு

திரிபுவகை

மிகை

திரிதலும் மிகையும்

போலியும் மிகையும்

இலக்கணப் போலியும் திரிதலும் திரிதலும் கெடுதலும்

இலக்கணப் போலியும்

போலியும் திரிதலும்

தொகுத்தல்

சிதைவு

வெண்ணெய் வென்ன

பொருட்டிரிபு, (1) ஆட்சி வேறுபடல், (2) சிறப்பு நீங்கள் என

இருவகைத்து.

‘அதே' என்னும் சொல்லை 'ஆம்' என்னும் பொருளிலும், 'மதி’ என்னும் சொல்லைப் 'போதும்' என்னும் பொருளிலும், மலையாளத்தில் வழங்கல் ஆட்சி வேறுபடல். விடைசொல்லுதலைக் குறிக்கும் செப்பு என்னும் சொல்லைச் சொல்லுதல் என்னும் பொருளிலும், விரல் மடக்கிய கையால் அல்லது குச்சால் அடித்தலைக் குறிக்கும் கொட்டு என்னும் சொல்லை அடித்தல் என்னும் பொருளிலும், தெலுங்கில் வழங்கல் சிறப்பு நீங்கலாம்.

தமிழ்நாட்டில் வழங்காது பிற திரவிட நாடுகளில் மட்டும் வழங்கும் சிறப்புச் சொற்கள் திசைச்சொற்களாகும். தமிழ்நாட்டிற்குள்ளேயே ஒரு பொருட்கு ஓரிடத்தில் ஒரு சொல்லும் மற்றோரிடத்தில் மற்றொரு சொல்லும்