உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

செந்தமிழ்ச் சிறப்பு

செந்தமிழ்நாட்டகத்த, செந்தமிழ் நாடென்றமையால், பிற நாடாகல் வேண்டுமென்பார் உதாரணங் காட்டுமாறு: “கன்னித் தென்கரைக் கடற் பழந்தீபம், கொல்லங் கூபகஞ் சிங்களமென்னும் எல்லையின் புறத்தவும் கன்னடம் வடுகம், கலிங்கம், தெலிங்கம், கொங்கணம், துளுவம், குடகம், குன்றகம் என்பன குடபா லிருபுறச் சையத் துடனுறைபு கூருந் தமிழ்திரி நிலங்களும், முடியுடையவ ரிடுநிலவாட்சியின் அரசு மேம்பட்ட குறுநிலக் குடுமிகள் பதின்மரு முடனிருப் பிருவருமாகிய பன்னிருவர் அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும் தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையன” என நிறுத்துப் பின்னும் “செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்து நூல் கண்டு” என ஓதியவதனாற் சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும், பன்னிரு நிலமாவன: குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமுந் துளுவமுங் கடகமுங் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலிங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.

இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல் கொள்ளப்படுதலின் குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும். பஞ்சதிராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாகலான், அவை யைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமை யுணர்க.

அந்நிலத்து வழங்குஞ் சொல்லாகிச் செஞ்சொல்லின் வேறுபட்டுச் சான்றோர் செய்யுளகத்து வருவன நீக்கப்படா எ-று.

குடாவடி யுளியம் என்றவழிக் குடா என்பது குடகத்தார் பிள்ளை கட்கு இட்டபெயர். அந்தோ என்பது சிங்களவர் ஐயோ என்பதற்கிட்ட பெயர். யான் தற்கரைய வருது என்றவழிக் கரைதல் என்பது கருநாடர் விளிப்பொருளுணரக் கூறுவது. செப்பு என்பது வடுகர் சொல்லுதற்குப் பெயராக வழங்குவது. பாண்டில் என்பது தெலிங்கர் பசுவிற்கும் எருத்திற்கும் பெயராக வழங்குவது. கொக்கு என்பது துளுவர் மாவுக்குப் பெயராக வழங்குவது. பிறவும் இவ்வாறு வருவன பலவற்றையும் வந்தவழிக் கண்டுகொள்க.

செஞ்சொல் = இயற்சொல்

"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்

ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொ லென்ப."

(நன். பெய. 16)

சடகோப இராமாநுச கிருட்டிணமாச்சாரியார் உரை: செந்தமிழ் நாடாகிய பாண்டி நாட்டைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளி லும், பதினெட்டுத் தேசங்களுள் தமிழ்நாடு ஒழிந்த பதினேழு நாடுகளிலும், வசிப்பவர்கள் தமது பேசும் பாழைகளிலுள்ள பதங்கள், அப் பொருளோடு