உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திசைச்சொல் எவை?

57

செந்தமிழில் வந்து வழங்குவன திசைச் சொற்களாம் என்று சொல்வர் (புலவர்) எ-று.

திசைச்சொல் திசைகளில் வழங்குகின்ற தேச பாழைகளிலிருந்து செந்தமிழில் வந்து வழங்கும் சொற்கள்.

கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டாவன: தென்பாண்டி நாடு, குட்ட நாடு, குட நாடு, கற்கா நாடு, வேணாடு, பூழிநாடு, பன்றி நாடு, அருவாநாடு, அருவா வடதலை நாடு, சீதநாடு, மலையமானாடு, சோழ நாடு என்பன. தென்பாண்டி நாடு - செந்தமிழ்ப் பாண்டி நாட்டுக்குத் தென்திசையிலுள்ளது.

எ-டு :

1. பசுவைப் பெற்றம் என்பதும்

சோற்றைச் சொன்றி என்பதும் } தென்பாண்டி நாட்டுச்சொல்

2. தாயைத் தள்ளை என்பது 3. தந்தையை அச்சன் என்பது 4. வஞ்சகரைக் கையர் என்பது 5. தோட்டத்தைக் கிழார் என்பது சிறுகுளத்தைப் பாழி என்பது

6.

7. வயலைச் செய் என்பது 8. சிறுகுளத்தைக் கேணி என்பது 9. புளியை எகின் என்பது 10. தோழனை எலுவன் என்பதும் தோழியை இகுளை என்பதும் 11. நல்ல நீரை வெள்ளம் என்பது 12. தாயை ஆய் என்பது

குட்டநாட்டுச் சொல்

குடநாட்டுச் சொல்

கற்கா நாட்டுச் சொல்

வேணாட்டுச் சொல்

பூழி நாட்டுச் சொல்

பன்றி நாட்டுச் சொல்

- அருவா நாட்டுச் சொல்

-

அருவாவடதலை நாட்டுச் சொல்

சீத நாட்டுச் சொல்

மலையமானாட்டுச் சொல்

புனனாட்டுச் சொல்

தமிழ்நாடு ஒழிந்த நாடு பதினேழாவன: சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கௌடம் குசலம்.

மாமரத்தைக் கொக்கு என்பது

அகப்படுதலைச் சிக்குதல் என்பது

கருத்தாக இருத்தலை எச்சரிக்கை என்பதும் சொல்லுதலைச் செப்புதல் என்பதும்

துளுவநாட்டுச் சொல்

கன்னட நாட்டுச் சொல்

தெலுங்க நாட்டுச் சொல்

மற்றவையும் இப்படியே ஆங்காங்கு வருதல் கண்டுகொள்க.

ஐயோ என்பதை அந்தோ என்பது சிங்கள நாட்டுச் சொல் என்று முன்னைய உரையாசிரியர்கள் எழுதியிருந்தாலும், அது 'ஹந்த' என்னும் வடசொல்லின் சிதைவு என்று தெரிதலால், இங்குக் கொள்ளப்படவில்லை.