உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

ஆங்கிலச்சொல்

பென் பாத்ரூம்

டிராயர்(மேசை)

காம்பவுண்டு

வேக்கன்சி

கோட்டு

வெராந்தா

செந்தமிழ்ச் சிறப்பு

தமிழ்ச்சொல் (சேரநாடு)

தூவல்

குளிமுறி

வலிப்பு

பரம்பு

ஒழிவு

குப்பாயம்

கோலாயி

‘உச்சி', ‘ஆண்டு', 'துவக்கம்' முதலிய தென்சொற்கள் தமிழ்நாட் டிலும் வழங்கினும் மலையாள நாட்டிற்போல் அத்துணைப் பெருவழக்காக வும் நாடு முழுமையும் வழங்குகின்றில.

இற்றைத் தமிழ்நாட்டில் வழங்கும் சில தென்சொற்கட்கு எதிர்ப்பாற் சொற்கள் இன்று மலையாளநாட்டு வழக்கிலேயே உள்ளன.

மலையாளம்

எ-டு:

தமிழ்

அச்சி(தாய், தமக்கை) சிறுக்கி தம்பிரான்

அச்சன்(தந்தை) செறுக்கன்(சிறுக்கன்)

தம்பிராட்டி

சோழ பாண்டி நாடுகளில் வழக்கற்றுப்போன சில ஒருசொல் வினை கள், சேரநாடாகிய மலையாள நாட்டிலேயே இன்று வழங்கி வருகின்றன.

எ-டு:

மலையாளம்

இற்றைத் தமிழ் (இருசொல்வினை)

(ஒருசொல்வினை)

கட்குன்னு-கக்குன்னு

குலெக்குன்னு

முருடுன்னு

குழிக்குன்னு

குலைதள்ளுகிறது

களவு செய்கிறான்

முருடாகின்றது

குழி தோண்டுகிறான்.

சேரநாட்டுத் தமிழின் சிறந்த சொல்வளம், மலையாளமொழியின் வாயிலாகவே இன்று அறியக்கிடக்கின்றது.

எ-டு: ஆழ்ச்ச = கிழமை, கிழமை, ஆழ்ச்சவட்டம் = வாரம்

பகர்க்குக = படியெடுக்க.

பையானி = தசையைக் கொத்திப் பிடுங்கும் ஒருவகைப் பாம்பு.

நொண்ணு = உள்வாய்

முத்தாழம்(முற்றாலம்) = காலையுண்டி

=

அத்தாழம்(அற்றாலம்) இராவுண்டி.

அயக்கூற, ஆகோலி, ஏட்ட, குளவன், நோங்ஙல்(கல்), மாலா முதலியன, தொன்றுதொட்டுச் சேரநாட்டில் வழங்கிவரும் மீன் பெயர்கள். திசைச்சொல் முறையில் மலையாளத்தில் வழங்கும் தென்சொற்கள் மாபெருந் தொகையின.