உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

செந்தமிழ்ச் சிறப்பு திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருப்பாணாழ்வார் முதலிய யாழ்வேந்த ரெல்லாம் பாணரே. 11ஆம் நூற்றாண்டில் தேவாரத்திற்கு இசைவகுத்தது திருநீலகண்ட யாழ்ப்பாணரின் மரபினரான ஒரு பெண்டாவர். தொல்காப் பியர் காலத்திற்கு முன்னிருந்து வழங்கிவரும் பாணாற்றுப்படை கூத்தராற்றுப் படை முதலிய செய்யுள்களும் நூல்களும் பாணரின் இசைத் தலைமையைப் புலப்படுத்தும்.

ஆரியப் பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்த பின்பே வடமொழியில் இசைநூல்கள் எழுந்தன. அவர்கள் தமிழ்நாட்டில் வதிந்து பல தலைமுறை யாக இசை பயின்றதினாலேயே தியாகராச ஐயர் தலைசிறந்த இசைப்புலமை வாய்க்கப் பெற்றனர் என்பதையும், அவருக்கும் தீட்சிதர்க்கும் முன்பே முத்துத்தாண்டவர் அரிய தமிழ்க் கீர்த்தனைகள் பாடியிருந்தனர் என்பதை யும், அவரைப் பின்பற்றியே ஐயரும் தீட்சிதரும் பாடினர் என்பதையும், அவர்கள் தமக்கிருந்த அளவிறந்த வடமொழிப் பற்றினாலேயே திரவிட மொழிகட்குள் மிகுந்த வடமொழித் தொடர்புள்ள தெலுங்கிலும் வடமொழியி லும் கீர்த்தனையியற்றினர் என்பதையும் அறிதல்வேண்டும்.

இசைத்தமிழ் கெட்ட வகை

பாட்டுத்தொழிலால் மதிப்பு, பெருவருவாய், மக்களை வயப்படுத்தல் முதலிய பயன்களைக் கண்ட ஆரியப் பார்ப்பனர் பிற்காலத்தில் அத் துறையில் இறங்கிப் பிறப்பால் உயர்வு தாழ்வு வகுக்கும் குலமுறை யமைப்பினால் பாணர்க்குப் பிழைப்பில்லாது செய்துவிட்டனர். அவர் தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்று தமிழரை யேமாற்றி ஒவ்வொரு துறை யிலும் முதலிடமும் முழுவிடமும் பெற்றனர். முத்தமிழ் முடிவேந்தரிடத்தும் எச்சமயத்திலும் அறிவிப்பில்லாமலே செல்லக்கூடிய பாணர் மரபினர் பார்ப்பனத் தெருவிலும் பொதுச் சாலையிலும் நடக்கவும் விடப்பட்டிலர். இசைத்தமிழ் இடைக்காலத்தில் மறைந்துபோனமைக்கு இதுவே பெருங் காரணம். இசைத்தமிழ் நூல்கள் படிப்பாரற்று எரிக்கும் சிதலுக்கும் இரையாயின. இதுபோதும் பார்ப்பனர் பார்ப்பன இசைவாணரையே போற்றிப் புகழ்வதும் தமிழ் இசைவாணரைத் தூற்றியிகழ்வதும் வழக்கமா யிருந்துவருகிறது. அவர் பார்ப்பன இசைவாணரின் அரங்கு எவ்வளவு இன்பமற்றிருப்பினும் இறுதிவரையிருந்து தலையாட்டியும் கைதட்டியும் பாராட்டுவதும், நாலுபக்கமும் கூலியாள்களை யிருத்திப் பாராட்டுவிப்பதும், செய்தித்தாள்கட்குச் சிறப்பித்தெழுதி விளம்பரஞ் செய்வதும், தமிழ் சைவாணரின் அரங்கு எவ்வளவு இன்பமுற்றிருப்பினும் முகத்தில் ஈயாடாமல் சிறிது நேரம் இருந்துவிட்டு இடையில் ஒவ்வொருவராய் எழுந்துபோய்விடுவதும் இன்றும் கண்கூடாகக் காண்கின்றோம். வாய்ப் பாட்டிற்கு நயினாப்பிள்ளையும், கின்னரி (பிடிலு)க்குக் கோவிந்தசாமிப் பிள்ளையும், மிருதங்கத்திற்கு அழகநம்பியும், டோலக்கிற்கு வேணுசெட்டி