உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

செந்தமிழ்ச் சிறப்பு சேவல் என்பது பொதுவாய் ஆண்பறவையைக் குறிப்பினும், ஆண் விலங்கையும் குறிப்பதற்குச் சிறிதும் விலக்கில்லை. சேவல் என்பதன் மூலமான சே என்னுஞ் சொல் விலங்கின் ஆணைக் குறித்தல் காண்க.

சே = = காளை. சேங்கன்று = காளங்கன்று, ஆண்கன்று. சே-சேவு-சேவல். ஏனம் = கரிய விலங்கு, பன்றி. இருமை = = கருமை. இரு

=

கரிய மாடு. இரு இனு

எரு

எருமை எனு ஏனு ஏனம். ஏனு ஏனை யானை. தெலுங்கில் எருமையை எனுமு என்றும், யானையை ஏனுக என்றும் கூறுதல் காண்க. யானையை ஏனையென்று இன்றும் தென்னாட்டுக்

குடியானவர் கூறுவர்.

கண்டி = கடுமையானது. கண்டம் = கடுமை, கொடுமை. கண்டன் = கொடியவன். ஆணெருமை மிகக் கொடியது. அதன் கொடுமையை இயற்கைநிலையில்தான் காணமுடியும். புலியினும் மடங்கலினும் காட்டெருமை கொடிதா யிருத்தல்பற்றியே, அது கூற்றுவனுக்கு ஊர்தியாகக் கூறப்பட்டதென்க. எருமைமறம் என்று புறப்பொருள் வெண்பா மாலையும்(7

13),

66

ஒருவ னொருவனை யுடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமையும்’

என்று தொல்காப்பியமும் கூறும் புறத்துறையை நோக்குக.

(பொருள். 72)

வாரணம் = நிலத்தையும் குப்பையையும் வாரிக் கிளைப்பது. கோழி என்னும் பெயரும் இப் பொருளுடையதே.

விடை = பருத்தது, பருத்த ஆண்விலங்கு. விடைத்தல் = பருத்தல். விலங்கிலும் பறவையிலும் ஆண் பருத்திருத்தலைக் காண்க.

இச் சொற்களெல்லாம் தூய தென்சொற்களா யிருத்தலாலேயே “கடிய லாகா கடனறிந் தோர்க்கே" என்றார் தொல்காப்பியர் . இதனால், அவ்வக் காலத்துத் தோன்றும் புதுப்புது சொற்களெல்லாம் தூய தென் சொற்களா யிருந்தால், அவற்றை விலக்குதல் கூடாது என்பதே, “கடிசொ லில்லை காலத்துப் படினே” என்னும் சூத்திரத்தின் பொருளாகும்.

66

பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே

என்னும் பொருளும் இதுவே.

(நன். 462)

இக்காலத்துத் தோன்றிக் கடியலாகாச் சொற்கள், மளிகை (பலசரக்குக் கடை), செயலாளன், சொற்பொழிவு, மாநாடு, தேர்வு(பரீட்சை) முதலியன.

மாந்தர் என்னும் சொல்லின் ஒருமை வடிவம் வழங்கிய பண்டை நூல்கள் இறந்துபட்டமையின், சில புலவர் மாந்தன் என்னும் சொல்லை