உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ce

'கடிசொலில்லை காலத்துப் படினே”

83

ஏற்றுக்கொள்கின்றிலர். பலர்பாற் சொல்லினின்று ஒருமைச் சொல்லை வகுத்துக் கொள்வதற்குப் புலமை வேண்டுவதில்லை; பகுத்தறிவே போதியதாகும்.

சிலர் புலவர், அல்லது புலவர் சிலர் என்று வழங்கிய பண்டை வழக்கு வீழ்ந்து, இன்று சில புலவர் என்னும் வழக்கு எழுந்துள்ளது. சில என்னும் சொல் அஃறிணை வடிவின தென்னுங் காரணத்தினால், அறிஞர் சிலர் அதனை ஏற்கின்றிலர். ஆயினும், 'நல்ல', 'பெரிய', 'வந்த', 'போன' முதலிய அகரவீற்றுக் குறிப்புப் பெயரெச்சங்களும் தெரிநிலைப் பெய ரெச்சங்களும் போல, சில பல முதலிய அகரவீற்றுக் குறிப்புப் பெய ரெச்சங்களும் கொள்ளப்படுவதற்குத் தடையில்லை யென்க.

இவையும் இன்னோரன்ன பிறவுமே “கடிசொ லில்லை காலத்துப் படினே” என்னும் சூத்திரத்தால் தழுவப்படுமேயன்றி, 'சபாஷ்', 'சலாம்' என்ற சொற்களும் இவைபோன்ற பிறவுமல்ல என்பது, தமிழரும் தமிழ் மாணவரும், தமிழ்ப் புலவரும் கவனித்தறிவாராக.

சபாஷ் சலாம் என்ற உருதுச் சொற்கள் இற்றைக்கு 300, 400 ஆண்டு கட்கு முன்னரே சிறந்த தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுவிட்டன என்று சில புலவர் கருதுகின்றனர். தமிழில் சொற்கள் தழுவப் பெறுதற்கு அவற்றின் தகுதியும் தூய்மையும் காரணமாகுமேயன்றி, அவை வழங்கும் 300, 400 ஆண்டுக்காலம் காரணமாகாது . அங்ஙனம் காலம் காரணமாயின், 23ஆம் நூற்றாண்டில் தழுவப்படுமாறு இன்று எவரும் எத்துணை அயன்மொழிச் சொற்களையும் தமிழிற் புகுத்தலாமே!

இனி, சபாஷ் சலாம் என்ற உருதுச் சொற்களைத் தமிழிற் புகுத்தியவர் புலவர் பெருமக்கள்(அருணகிரிநாதரும், குமரகுருபரரும்) என்று ஒரு காரணங் காட்டுகின்றனர், அவற்றைத் தழுவ விரும்பும் தமிழ்ப்புலவர்.

டு

இத்தகைய இடர்ப்பாட்டு நிலைகளில், தமிழ் சிறந்ததா, தமிழில் வீணாக அயற்சொற்களைப் புகுத்தி அதன் தூய்மையைக் குலைக்கும் புலவர் சிறந்தவரா என்று நோக்குதல் வேண்டும். தமிழ்ப்புலவரினும் தமிழ் சிறந்தது என்பதை எவரும் மறுக்கார்.

மேலும், அருணகிரிநாதரும் குமருகுருபரரும் இருந்த காலம் சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் இல்லாத காலம். வடமொழி உண்மையில் தேவமொழி யென்றும், தமிழ் அதன் கிளைமொழியென்றும், வடசொற்கள் கலப்பது தமிழுக்குப் பெருமை என்றும் கருதப்பட்ட காலம்; பல துறைகளில் பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தாது தமிழன் தன்மான மற்றிருந்த காலம். இத்தகைய நிலையில் வேண்டாது புகுத்தப் பெற்ற அயற்சொற்களை அளவையாகக் கொள்வது, தமிழறிஞர்க்குச் சற்றும் பொருந்தாது.