உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

செந்தமிழ்ச் சிறப்பு

3. பாராளுமன்ற ஆட்சியும், பொதுமக்களும் பெருமக்களாதலும். 4. அடிமைத்தன வெறுப்பும் உரிமை யார்வமும்.

5. உருவ வணக்க வொழிப்பும் ஒரு தேவ வழிபாடும்.

6. மனவமைதிக்கும் முன்னேற்ற முயற்சிக்கும் துணை செய்யும் ஆங்கில நாட்டுச் சமதட்ப வெப்பநிலை.

ம்

7. தீவு வாழ்வும், கலப்படைப் பெருக்கமும், 18ஆம் 19 ஆ நூற்றாண்டுகளில் உலகில் 1/3 பங்கைக் கட்டியாண்டு அறிவும் பொருளும் பெருக்கிக் கொண்டமையும்.

8. ஆராய்ச்சியாளரையும்

பேரறிஞரையும் வள்ளலாரையும் புதுப்புனைவாளரையும் புது நாடு காணியரையும் அரசும் பொதுமக்களும் ஊக்கியமை.

9. இங்கிலாந் தாங்கிலர் 1765-ல் நீராவிச் சூழ்ச்சியப் பொறியும், 1829- ல் இருப்புப் பாதைச் சூழ்ச்சிய வண்டியும், 1831-ல் மின்னாக்கப் பொறியும் புதுப் புனைந்தமையும்; அமெரிக்க ஆங்கிலர் 1835-ல் மின் தொலைவரிப் பொறியும், 1876-ல் தொலைபேசியும், 1876-ல் ஒலிப்பதிவானும், 1878-ல் மின் விளக்கும், 1893-ல் திரைப்படமும், 1903-ல் வானூர்தியும், புதுப்புனைந்தமையும், 1970-ல் திங்களை யடைந்தமையும்.

10. 1875-ல் இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வியைப் புகுத்தினமை. 11. தகுதிபற்றிப் பதவியளித்து வருகின்றமை.

12. மூவேறு அரசியற் கட்சிகளும், தாய்மொழியையும் தம் இலக்கியத்தையும் பண்பாட்டையும் உயிர்நாடியாகக் கொண்டு போற்றி வருகின்றமை.

தமிழர் தாழ்விற்கும் தமிழின் தளர்ச்சிக்குங் கரணியங்கள் 1. மூவேந்தரும் ஆரியக் குலவொழுக்கத் திட்டத்தையும் கூட்டுமத முறையையும் மேற்கொண்டு, ஒற்றுமையையும் அரசையும் இழந்தமை.

2. வேத மொழியையும் சமற்கிருதத்தையும் திருக்கோயில் வழிபாட்டு மொழியும் வீட்டுச் சடங்கு மொழியுமாக்கித் தமிழைத் தாழ்த்தியமை.

3. ஆரியர் வருகைக்கு முற்பட்ட பல்துறைத் தனித்தமிழிலக்கியம் அனைத்தும் அழியுண்ணவும், பிற்பட்ட நூல்களுட் பெரும் பாலன இறந்துபடவும் விட்டமை.

4. சமற்கிருதச் சொற்களை வேண்டாது வழங்கி, ஆயிரக் கணக்கான அருந்தமிழ்ச் சொற்கள் வழக்கறவும் இறந்துபடவுஞ் செய்தமை.