உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




13

புது மணிப்பவளப் புன்மையும் புரைமையும்

அந்தோ! நிறைபுல மறைமலையடிகள் போலும் மும்மொழிச் செம்மலும், வேங்கடசாமி நாட்டார் போலும் விழுத்தமிழ்ப் புலவரும், சுந்தரம் பிள்ளை போலும் மெய்ப்பொருட் பேராசிரியரும், பூரணலிங்கம் பிள்ளை போலும் ஆங்கிலப் பேராசிரியரும், இராமசாமிக் கவுண்டர் போலுங் கல்லூரி முதல்வரும், மகிழ்நன்(சந்தோஷம்) போலும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரும், பவானந்தம் பிள்ளையும், துடிசை கிழார் என்னும் துடிப்புமிக்க சிவனியத் தமிழரும் போலுங் காவல் துறைப் பேரதிகாரியும், சோமசுந்தரம் பிள்ளை போலும் இலக்கணப் பெரும் புலவரும், மாணிக்க நாயகர் போலும் பொறிவினை மாணிக்கமும், சோம சுந்தர பாரதியும் கா.சு. பிள்ளையும் உமாமகேசுவரம் பிள்ளையும் போலும் வழக்கறிஞரும், இன்று தமிழ் காத்தற்கில்லை.

தமிழ்நாடு நால்வாசங் கோட்டை ("நால்வாசங் கோட்டை நாலு பக்கமும் ஓட்டை”) போல நாற்றிசையுந் திறந்த வெளி. அதில் தமிழ்த் துறையோ திறந்த மடம். அதிலுள்ள தமிழ்ப் புலவரோ ஊருக்கிளைத்த பிள்ளையார் கோயிலாண்டி, ஆங்கிலந் தெரிந்தாற் போதும். எவரும் எப் பதவியும் பெறலாம். எங்ஙனமும் எத்துணையுந் தமிழைக் கெடுக்கலாம். அதை எவருஞ் சொல்லப்புகின் உள்ளதும்போம். ஆதலால், ஒருவரும் வாய் திறப்பதில்லை. இதுவே விடுதலை மாட்சிமை.

இவ்வுலகில் 18ஆம் நூற்றாண்டு நடுவரை இருந்து வந்தது கைவினை நாகரிகம். அதன் பின்னர்த் தோன்றியது பொறிவினை நாகரிகம். முன்னதைத் தோற்றியவர் குமரிநாட்டுத் தமிழர்; பின்னதைத் தோற்றியவர் ஆங்கிலரும் அவர் வழியினரான அமெரிக்கரும்.

ஆங்கில ருயர்விற்கும் ஆங்கில வளர்ச்சிக்குங் கரணியங்கள்

1. ஐபீரியர், (அறுவகுப்பாரான) கெலத்தியர், (ஆங்கலர், சாகசனர், சூட்டர் என்னும்) என்னும்) மூவகுப்புச் மூவகுப்புச் செருமானியர், தேனியர், நார்மானியர் முதலிய பல்வேறு மக்களினக் கலவையா யிருத்தலும் மதி விளக்கமும்.

2. தொழில்பற்றிய குலவகுப்பும் ஒற்றுமையும்.