உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

ஒ,

செந்தமிழ்ச் சிறப்பு முதலியன இல்லை. மிகுந்த ஒலிப் பெருக்கமுள்ள சமற்கிருதத்திலும் எ, ழ, ற, ன, F, Z முதலியன இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனி ஒலியுடல் உள்ளது. எல்லா மொழிகளிலும் எல்லா வொலிகளையுஞ் சேர்த்தல் இயலாது. சேர்ப்பின் மொழி மாறிவிடும்.

தமிழிலுள்ள ஒலிகளெல்லாம் மென்மையானவை. அதில் வல்லொலி களைச் சேர்த்து வல்லொலி மொழியாக்க விரும்புவது, மெல்லியலான பெண்மேனியை வல்லியலான ஆண்மேனியாக மாற்ற முயல்வதொத்ததே. தமிழ் முப்பான் மெல்லொலிகளே கொண்டதேனும், நம் முன்னோ ரான குமரிநில மக்கள், தம் நுண்மாண் நுழைபுலத்தால், அக் காலத்தில் மட்டுமன்றி எக்காலத்துந் தோன்றும் புதுப்புதுக் கருத்துகளையெல்லாம் புலப்படுத்தத்தக்க சொற்களைத் தோற்றுவிக்குமாறு, ஏராளமான வேர்ச் சொற்களை யாக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாகத் தொழிற் பெயரீறுகளை நோக்குக. தமிழிலுள்ள அளவு தொழிற் பெயரீற்று வளம் வேறெம் மொழியிலு மில்லை.

ஒரு மொழியின் வளத்தைக் காட்டுவன அதன் சொற்களேயன்றி ஒலிகளல்ல. மொழி தோன்றியது சொற்களாகவேயன்றி எழுத்தொலிகளாக வல்ல. இலக்கணம் ஏற்பட்டபோதே, சொற்கள் எழுத்தொலிகளாகப் பகுக்கப்பட்டன.

எ-டு:

6T-(b):

காகா காக்கா

க் + ஆ

+ க் +

காக்கை, காகா

_

(காக) காகம்.

ஆ என்று தோன்றவில்லை.

சொற்களே பொருளுணர்த்தும்; எழுத்தொலிகளல்ல. ஓரெழுத்துச் சொல்லேயாயினும், பொருளளவிற் சொல்லேயன்றி எழுத்தொலியன்று. பலவெழுத்துச் சொல்லைத் தனித்தனி எழுத்துகளாகப் பகுத்துவிடின், பொருள் தராது.

தமிழில் அயலொலி கலத்தல் கூடாதென்பதை யுணர்த்தவே,

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே”

(எச்ச. 5)

என்று தொல்காப்பியரும்,

இடையில் நான்கும் ஈற்றி லிரண்டும்

அல்லா வச்சை வருக்க முதலீ(று)

யவ்வாதி நான்மை எவ்வாகும் ஐயைம்

பொதுவெழுத் தொழிந்த நாலேழுந் திரியும்”

என்று பவணந்தியாரும், கூறிப் போந்தனர்.

(நன்.பத. 19)

ஆகவே, சொற்றூய்மை போன்றே ஒலித்தூய்மையும் தமிழுக்கு

இன்றியமையாத பண்பாம்.