உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புது மணிப்பவளப் புன்மையும் புரைமையும்

89

தமிழைக் குமரிநாட்டிலேயே செந்தமிழ் கொடுந்தமிழ் எனப் பகுத்து, செந்தமிழையே பேணிவந்தனர். கொடுந்தமிழ் நாடுகளில் வழங்கிய சிறப்புச் சொற்களை மட்டும் திசைச் சொற்கள் (Provincial Words) என்று ஏற்றுக் கொண்டனர்.

"இயற்சொற் றாமே

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்

தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே.'

"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி.”

(தொல். எச்ச. 2)

(60g 60g 4)

அக் காலத்துக் கொடுந்தமிழ் நாடுகள் வேறு; தொல்காப்பிய வுரையாசிரியர் கூறும் கொடுந்தமிழ் நாடுகள் வேறு.

வெளிநாடுகளினின்று வந்த பொருள்களெல்லாம் செந்தமிழ்ப் பெயர் பெற்றன. உருளைக்கிழங்கு, ஏழிலைக்கிழங்கு, கரும்பு, சாத்துக்குடி, செந்தாழை (அன்னாசி), புகையிலை, மிளகாய் முதலிய நிலைத்திணைப் பொருள்களும், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி, கழுதை, கோவேறு கழுதை (அத்திரி), குதிரை, வரிக்குதிரை, நீர்யானை முதலிய விலங்குகளும்; தீக்கோழி, வான்கோழி முதலிய பறவைகளும்; மிதிவண்டி, புகைவண்டி, சூழ்ச்சிய வண்டி முதலிய ஊர்திகளும்; குண்டுக்குழாய், வைத்தூற்றி, மண்ணெண்ணெய் முதலிய பல்வகைப் பொருள்களும், வெளிநாடுகளி னின்று வந்தவையே.

குதிரை ஒன்றே பன்னிரு வகையாக வகுக்கப்பட்டு வெவ்வேறு பெயர் பெற்றுள்ளது. குச்சுக்கிழங்கு இடந்தொறும் பெயர் வேறுபட்டுப் பன்னிரு சொற்களாற் குறிக்கப்படுகின்றன. ஆதலால், வெளிநாட்டுப் பொருள்கட் கெல்லாம் வெளிநாட்டுப் பெயர்களே யிருத்தல் கூடுமென்பது பொருளற்ற உறழாட்டே.

பிறமொழிகளெல்லாம், தமிழ்போல் சொல்வளமும் சொல்லாக்க வாய்ப்பும் தூய்மை மரபும் உடையனவல்ல. ஆங்கிலர் கடந்த முந்நூற் றாண்டுகளாகப் புதுப் புனைவுகளால் தம் அறிவைப் பெருக்கிக் கொண் டனர். தம் புத்தறிவுக் கருத்துகளைக் குறிக்கத் தம் மொழியிற் சொல் லின்மையால், இலத்தீன் கிரேக்க மொழிகளினின்று ஏராளமாய்க் கடன்கொண்டு தம் கருத்திற்கேற்பத் திரித்துக்கொண்டனர்.

எ-டு:

புதுக்கருத்து

கடன்சொல்

சூழச்சியப்பொறி L.ingenium

திரிப்பு

engine

(சூழ்ச்சி)

மின்

Gk. electron

electricity

(அம்பர்)