உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




90

செந்தமிழ்ச் சிறப்பு இங்ஙனம் ஆங்கிலர் தம் கருத்தையுணர்த்தப் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தியது, பங்கீட்டுக் காலத்தில் மிகுதியாய் அரிசி கிடைக்குமிடத்திற் பையையும், உழவன் தான் விளைத்த கூலத்தைச் சந்தைக்குக் கொண்டுபோக வண்டியையும், இரவல் பெற்றதொக்கும்.

ஆங்கிலத்தில் மட்டுமன்றி இலத்தீன் கிரேக்க மொழிகளிலும் பல அடிப்படைச் சொற்கள் தமிழாயிருப்பதால், இற்றை ஆங்கில அறிவியற் கம்மியக் கலைக் குறியீடுகளிற் பல தமிழ்ச்சொற்களையே அடிப்படை யாகக் கொண்டும் உள்ளன. மேலும், ஆங்கிலக் கலைக்குறியீடுகளெல்லாம் பல்வேறு வகையில் மிக எளிய முறையில் அமைந்துள்ளன. அம் முறைகளைக் கையாளின், எல்லாக் கலைக்குறியீடுகளையும் தமிழிற் செவ்வையாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம். என் புதிய வெளியீடான "மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை” என்னும் பொத்தக முடிவுரையில் இவ் வுண்மைகளெல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஆண்டுக் கண்டு தெளிக.

தமிழ்நாட்டரசு சட்டத்துறை தவிர வேறெதிலும் குறியீடுகளை மொழிபெயர்க்க இதுவரை எத்தகை முயற்சியும் செய்யவில்லை. காலஞ் சென்ற இ. மு. சுப்பிரமணியப் பிள்ளை போன்ற தனிப்பட்ட தமிழ்ப் புலவரும், கிண்டி, கோவை, காரைக்குடி அண்ணாமலை நகர் முதலிய இடங்களிலுள்ள கல்லூரி மாணவருமே, தம் அளவிறந்த தமிழ்ப் பற்றினால், ஆட்சிச் சொற்களையும் பல்வேறு அறிவியற் குறியீடுகளையும் தொகுத்தும் மொழிபெயர்த்தும் உள்ளனர். அரசு அவற்றையெல்லாம் தொகுத்து அளவைப்படுத்தி, ஆட்சிச் சொற்களைப் போன்றே பிறவற்றையும் ஆட்சிக்குக் கொண்டுவருதல் வேண்டும். இதற்காகத் தக்காரைக் கொண்ட ஒரு நிலையான குழுவையும் அரசு அமர்த்துதல் வேண்டும்.

மூவேந்தரும் ஆரியக் கொள்கைகளைத் தழுவியபின் தனித்தமிழ்க் காவலரான புலவர் மரபு அற்றுப் போனதினால், 10ஆம் நூற்றாண்டிலிருந்து வடசொற்கள் தமிழில் வரைதுறையின்றிப் புகுந்து தமிழ்ச்சொற்களை வழக்கு வீழ்த்தவும் தமிழைக் கலவை மொழியாக்கவும், தொடங்கின. வடமொழி வெறியரான மாலிய(வைணவ)ப் மாலிய(வைணவி)ப் பிராமணர், நாலாயிரத் தெய்வப் பனுவல்களின் உரைகளையும் மாலியக் கோட்பாடுகளையும் வடசொல்லுந் தென்சொல்லுங் கலந்த மணிப்பவள நடையிலேயே வரைந்து வந்தனர். அது தமிழில் விளக்க முடியாத மாலிய மருமங்களை (இரகசியங்களை) அறிய விரும்பிய அறிஞர்க்குமட்டும் வரையப்பட்ட தன்று. தமிழ்நாட்டு மாலியர் சிறுபான்மையராதலால், அது தமிழைப் பெரிதுந் தாக்கவில்லை. ஆயினும், 11ஆம் நூற்றாண்டில் எழுந்த வீரசோழியம் என்னும் புத்தமித்திரன் புன்னூல்,