உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புது மணிப்பவளப் புன்மையும் புரைமையும்

இடையே வடவெழுத் தெய்தின் விரவியல் ஈண்டெதுகை நடையேது மில்லா மணிப்பிர வாளநற் றெய்வச்சொல்லின் இடையே முடியும் பதமுடைத்தாம்.......'

JJ

என்று நுவலுமளவு தமிழ் தாக்குண்ணவே பட்டது.

91

(வீர. அலங். 40)

“கி.பி. 9ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மிதமிஞ்சிய வடமொழிக் கலப்பால் கேரள இலக்கியத்தின் ஒரு பகுதி மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டது. பண்டைய வட்டெழுத்தின் இடத்தில் ஆரிய எழுத்து இடம் பெற்றது. கி.பி. 12ஆம் நூற்றாண்டளவில் மணிப்பிரவாள இலக்கியங்கள் தோன்றின. வைசிக தந்திரம், உண்ணுநீலி சந்தேசம், உண்ணிச்சிரிதேவி சரிதம், உண்ணியச்சி சரிதம், அனந்தபுர வர்ண்ணனம், ஆகிய நூல்கள் லீலா திலகத்திற்கு முன்னர்த் தோன்றிய முக்கியமான மணிப்பிரவாள இலக்கி யங்கள். இவற்றை அடிப்படையாக அமைத்து வடமொழியில் எழுதப் பட்டதே, கி.பி. 14ஆம் நூற்றாண்டில் எழுந்த லீலா திலகம் என்ற மணிப்பிரவாள இலக்கணம்.” (தமிழ் லீலாதிலகம், முன்னுரை, பக். 6-7).

இன்று இரண்டொருவர் அல்லது ஒருசிலர் விரும்பும் மணிப் பவளமோ, லீலாதிலகம், போலாது, வடமொழியும் ஆங்கிலமும் அவற்றின் சிறப்பெழுத்தொடு தமிழிற் கலக்கும் இருமடி மணிப்பவளம் அல்லது மும்மணிக் கலவை.

சேர வேந்தர் குடி அற்றபின், மலையாள நாட்டில் தலைமையாக விருக்கும் நாயர் வகுப்பைச் சேர்ந்த மன்னரும் மக்களும் ஆரியத்திற்கு முற்றும் அடிமைப்பட்டுப் போனதினால், சேரநாட்டுச் செந்தமிழ் முன்பு கொடுந்தமிழாக மாறிப் பின்பு தெலுங்கு கன்னடம் முதலிய திரவிட மொழிகளினுங் கேடாகச் சிதைந்து, மணிப்பவள மொழியாக வழங்கி வருகின்றது.

இனி, தமிழ் மும்மொழிக் கலவையாயின், எந்நிலை யடையுமோ, இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

மாந்தன் பேசக் கற்றதிலிருந்து தொடர்ந்து படிப்படியாக முழு வளர்ச்சியடைந்து கடந்த ஐம்பதினாயிரம் ஆண்டுகளாக வழங்கிவரும் ஒப்புயர்வற்ற தன்னந்தனித் தூய தமிழை, மறைமலையடிகள் போன்ற நிறை புலவர்க்கும் மாற்றவும் சிதைக்கவும் அதிகாரமில்லை. அங்ஙனமிருக்க, தமிழ்ப் புலமையும் தமிழாராய்ச்சியும் தமிழ்ப் பற்றுமில்லாத ஒருசிலர் தமிழை உருத் தெரியாது மாற்ற உரிமையுடையரோ?

20-5-1978 அன்று, “திருச்சிராப்பள்ளித் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் திரு. நா. ஞானசம்பந்தம் அவர்கள், தமிழில் உள்ள சொற்கள் அனைத்துக்கும் வேர் இருக்கின்றது என்று கண்டுபிடித்திருப்பதாக, நான்கு நாள்கட்குமுன் வந்தவர்கள் சொன்னார்கள். ஒரு பக்கம் அறிஞர் சிலர் இவ் வகையில் ஆராய்ந்து வரும்போது, கொச்சைத்தமிழ் நடையும் மணிப்