உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

செந்தமிழ்ச் சிறப்பு

பிரவாள நடையும் மறைமலையடிகள் கொள்கைக்கு மாறாகப் பெருகி வருவது வருந்துதற்குரியது. புலவர்கள், பேராசிரியர்கள் கவனிக்கின்றார்க ளில்லை” என்று வருந்தி எனக்கெழுதிய தாமரைச் செல்வர், திடுமென்று மனந்தடுமாறி, “ஆழ்ந்து எண்ணிப் பார்ப்போமானால், பல்துறை அறிவியல் அறிவையுந் தமிழில் கொடுப்பதற்கு, நாமும் பிற மொழியினரைப்போல அறிவியல் கலைச்சொற்களை அப்படியே எடுத்துக்கொண்டு, தமிழியல் புகட் கேற்ப அமைத்து அறிவியல் நூல்களை ஆக்கிக் கொள்வதே தக்க வழியாகும்,” “கலைச்சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு தனித்தமிழில் நூல்கள் ஆக்கவேண்டுமே யல்லாது, வழக்கத்திலுள்ள பொதுவான தமிழ்ச் சொற்களையும் கைவிட்டுப் பிறமொழிச் சொற்களைக் கூட்டியும் கொச்சைச் சொற்களைப் புகுத்தியும் இலக்கணப் பிழையுறவும் எழுதுதல் கூடாது.” என்று மேழச் 'செல்வி' ஆசிரியவுரை வரைந்திருப்பது, ஒரு கன்னி சிலரொடு மட்டும் சிலமணிநேரம் கூடி விளையாடிவிட்டு, ஏனைப்பொழுதெல்லாம் தன் கற்பைக் கண்டிப்பாய்க் காத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது போலிருக்கின்றது.

இனி, ஆடவைச் 'செல்வி' யிதழில், 'புதிய முத்தமிழ்'க் கட்டுரையின் கீழ், “இக் கட்டுரையில், ஆசிரியர் வடமொழி எழுத்துகளை அறிவியல் சொற்களைத் தமிழில் எழுதுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்று, அறுதியிட்டுக் கூறுவதை நோக்குக. இலக்கிய நடைக்கு இவ் வெழுத்து களைப் பயன்படுத்தக்கூடாது என்று, கண்டிப்பாகக் கூறுவதை வரவேற்க லாம்" என்று தாமரைச் செல்வர் குறிப்பு வரைந்திருப்பது, இந்தியை ஆட்சிக்கும் எழுத்துப் போக்குவரத்திற்குந்தான் பயன்படுத்த வேண்டும்; இலக்கியத்திற்குப் பயன்படுத்தக் கூடாது, என்று சொல்வது போன்றே யிருக்கின்றது.

பாடப் பொத்தகங்களும் ஒருவகை ஒரு

இலக்கியமே என்பதை

அவரறியாதது வருந்தத்தக்கது. இன்று பாடப் பொத்தகத்திற்கு நேர்வதே நாளை இலக்கியத்திற்கும் நேரும். அதன்பின் இடைக்கால நிகண்டுகள் போல, அகரமுதலிகளும் அயன்மொழிச்சொற்களை யெல்லாம் அவற்றின் சிறப்பெழுத்துகளுடன்,

"நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்கம் உலக மாதலின்

இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்

(மரபு. 90)

என்று கி.மு. 7ஆம் நூற்றாண்டிலேயே, தொல்காப்பியம் ஓம்படை கூறியிருத்தல் காண்க.

இன்னும் மூவாண்டுள், 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் நெறிமுறைகள்' என்னும் நூல் உருவாகும். அதன்பின், அதைப் பின்பற்றி, எப் புதுச்