உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புது மணிப்பவளப் புன்மையும் புரைமையும்

93

சொல்லும் புனைந்து கொள்ளலாம்; எக் கலைக் குறியீட்டையும் மொழி பெயர்க்கலாம். அதுவரை பொறுமையாயிருத்தல் வேண்டும்.

ஆட்பெயர், இடப்பெயர் முதலிய மொழிபெயர்க்கக் கூடாத சிறப்புச் சொற்களையும், தமிழெழுத்திலேயே எழுதுதல் வேண்டும். எ-டு சேக்கசுப்பியர், ஆப்பிரிக்கா, பிற சொற்களையெல்லாம் மொழிபெயர்த்தே யாதல்வேண்டும்.

இனி, 'புதிய முத்தமிழ்' வகுத்த புதிய புணர்ச்சி நெறிப்படி,

1. நிலைமொழி யீற்றில் நிற்பது மெய்யேல் வருமொழி ரலமுன் வாரா வென்க

கலைமான் இரண்டு கண்டே னிலக்கில் எனவுரைத் தெழுதுக இதுமுது நெறியே. 2. நிலைமொழி யீற்றில் உயிரொலி நிற்பின் வருமொழி ரலமுன் வரலா மென்க கலைமா ரெண்டு காணுக லெக்கில் எனவுரைத் தெழுதுக இதுபுது நெறியே.

என்று புணர்ச்சி யிலக்கணத்தை மாற்றவும் நேரும். இதன் தீங்கை அறிஞர் கண்டுகொள்க.

ஒருவர் ஏதேனும் உயர்பதவி பெறின், தாம் தேர்ச்சி பெற்ற துறையிலேயே சிறப்புப் பணி செய்தல் வேண்டும்; தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அடாததில் தலையிடக் கூடாது.

தமிழ்நாடு இன்னும் விடுதலை பெறவில்லை. தமிழ்நாட்டு உண்மையான வரலாறும் இன்னும் எழுதப்படவில்லை. எதிர்காலத்தில் ஒரு தமிழ்க் கமால் பாசா தோன்றி எர்க்குலிசு திறவகையில், தமிழரின் மூவாயிர வாண்டடிமைத்தன விளைவையும் ஒருங்கே அகற்றிவிடலாம். ஆதலால், வரம்பு கடந்த நடத்தையை விட்டொழிக.

இன்றே, முடிவுகொள்ள வேண்டுமெனின், உரைவேந்தர் ஔவை சு.துரைசாமிப்பிள்ளை, பெரும்புலவர் வேணுகோபாலப் பிள்ளை, அருட்டிரு அழகரடிகள், தவத்திருக் குன்றக்குடி அடிகள் முதலிய பேரறிஞரைக் கூட்டிப் பெரும்பான்மைத் தீர்ப்பை ஏற்றுக் கொள்க.

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்”

கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ."

-

- “செந்தமிழ்ச் செல்வி" ஆகத்து 1978