உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

119

ஐ, ஒள இரண்டும் முறையே அஇ, அஉ என்னும் புணரொலி களாதலால், அடிநா விளிம்பு மேல்வாய்ப் பல்லைப் பொருந்தி யொலிக்கும் ஐகாரம் ஏகாரத்தின் பின்னும், இதழ் குவிந்தொலிக்கும் ஔகாரம் ஓகாரத்தின் பின்னும் வைக்கப் பட்ட

ன.

ஆய்தம் நுண்ணிய ககரமாதலால், ககரத்தின் முன் வைக்கப்

பட்டது.

மெய்களுள் வல்லினமும் மெல்லினமும் எதிரினங்களாதலால், முதற்கண் தோன்றியவையெல்லாம் வலியும் மெலியுமாக இவ் விரண்டாய் முன் அமைக்கப்பெற்றன. இடையினம் அவற்றின் பின் வைக்கப்பட்டது. ள, ழ, ற, ன நான்கும் பிற மெய்கள் ஒழுங்கு படுத்தப் பட்டதற்குப் பிந்தித் தோன்றியமையால், இறுதியில்

வைக்கப்பட்டன.

வல்லினமெல்லின மெய்களுள், க ங அடியண்ணப் பிறப் பினவும், ச ஞ இடையண்ணப் பிறப்பினவும், ட ண முன்னண்ணப் பிறப்பினவும் த ந பல்லண்ணப் பிறப்பினவும், ப ம இதழகப் பிறப்பினவும் ஆதலால், அம் முறையே வைக்கப்பட்டன.

மகரமொழிந்த மெல்லின மெய்களெல்லாம் தன்தன் வல்லின மெய்க்குப்பின் தோன்றியமையாலும், வலியொலித்த பின் மெலி யொலிப்பதே முயற்சிக் கெளிமையாதலாலும், வலியும் மெலியும் அடுத்தடுத்து நிற்பது ஒலிவேற்றுமையைத் தெளிவாய்க் காட்டு வதாலும், வலிமுன்னும் மெலி பின்னுமாக இணையிணையாய் நிறுத்தப்பெற்றன வென அறிக.

இடையின வொலியின் இடைத்தன்மை வல்லொலியும் மெல்லொலியும் அறிந்த பின்னரே அறியக் கிடத்தலின், வலிமெலி களின் பின் இடையினம் வைக்கப்பட்டது. இடையின மெய்களுள், யகரம் இடையண்ணத்திலும், ரகரம் முன்னண்ணத்திலும், லகரம் பல்லண்ணத்திலும், வகரம் பல்லிதழிலும் பிறப்பதால், அவை அம்

முறையே வைக்கப்பட்டன.

குமரிக்கண்டத்தில் நெடுங்கணக்குத் தொடங்கியபோது, அதில் அமைந்திருந்த எழுத்துகள் இத்தனையே. பின்னர், நாளடை வில் ள, ழ, ற, ன என்னும் நான்கும் தோன்றின. அதனாலேயே அவை இறுதியில் வைக்கப்பட்டன.

அந் நான்கனுள், ள ழ முன்தோன்றியமையால் முன்னும்; ற ன பின்தோன்றியமையாற் பின்னும் வைக்கப்பட்டன.

ள, ழ இரண்டும் முன்னண்ண வருடொலிகளாயினும் (Linguals or Cerebrals), ழகரம் ளகரத்தினும் சற்றுப் பின்னிருந்து வருடப் பெறுவதால், முன்வைக்கப்பெற்றது.