120
தமிழ் வரலாறு
120
இறுதிமெய் நான்கும் பிந்தித் தோன்றின
ஏதுக்களாவன:
தமிழ் வரலாறு
வென்பதற்கு
(1) ள, ழ இரண்டும் இடையினத்துள்ளும் லகரத்திற்கு
முன்னும் வைக்கப் பெறாமை.
(2) ற, ன இரண்டும் வலிமெலி யிணைகளுள் த ந இணைக்கு முன் வைக்கப் பெறாமை.
எ-டு: கல்-கருமை. கல்+து
=
(3) லகரம் திரண்டு ளகரமும் ளகரம் திரண்டு ழகரமும் ஆதல். கஃறு. கஃறெனல்= கருமைக் குறிப்பு. கல்-கால்=கருமை. கால் காள்=கருமை. காள்- காழ் = கருமை.
(4) ரகரம் திரண்டு றகரம் ஆதல்.
எ-டு: அர்-அறு, ஒளிர்-ஒளிறு, முரி-முறி.
(5) னகரந்
தோன்றுமுன்
வழங்கியமை.
நகரமே
சொல்லிறுதியிலும்
எ-டு: வெரிந், பழுநு
(6) தமிழின் தொன்மையும் ஏனையொலிகளின் மென்மையும். றகரம் தோன்றியபோது அதற்கினமாகவே னகரமும் உடன் தோன்றிற்று. தந்நகரம் றகரத்திற்கு இனமாகாமை காண்க.
தமிழின் தொன்மை, தென்மை, முன்மை, மென்மை முதலிய தன்மைகளை அறியாமையால், கால்டுவெல் உள்ளிட்ட மேலை யாராய்ச்சியாளர் ஆரிய ஏமாற்றை நம்பித் தமிழைச் சமற்கிருத அடிப்படையிலாய்ந்து, பேரன் பாட்டனைப் பெற்றான் என்னும் முறையில், தமிழ் நெடுங்கணக்கு சமற்கிருதத்தைப் பின்பற்றிய தென்று முடிவு கொண்டுவிட்டனர். இதனால் சில கொண்டான் மாரும் தமிழ்ப் பற்றற்ற திரவிடத் தமிழ்ப் புலவரும் ழ, ள, ற, ன நான்கும் வடமொழியி லில்லாமையால் நெடுங்கணக்கிறுதியில் வைக்கப்பட்டனவென்று, பிதற்றலாயினர். வடமொழியிலின் மையே இறுதிவைப்பிற்குக் கரணியமாயின், வடமொழி யிலில்லாத எகர ஒகரமும் இறுதியில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டுமே! அங்ஙன மின்மையின், அது போலி யுரையென மறுக்க.
உருவம்
எழுத்து என்னும் பெயரே, தமிழுக்கு இலக்கணந் தோன்று முன்னரே எழுத்திருந்தமையை உணர்த்தும். எழுதுவது எழுத்து எழுதுதல்-வரைதல்.