இயனிலைப் படலம்
(3) எதிர்கால வினை
165
செய்யும் என்னும் எதிர்கால வினைமுற்றின் ஈறான உம் என்பது முன்மைச் சுட்டான உகர வடியிற் பிறந்து, கால முன்னான முற்காலத்தையும் இடமுன்னான எதிர்காலத்தையும் உணர்த்தும் சொல்லுறுப்பாகும்.
"உம்மை வினைவந் துருத்த லொழியாது
என்பதில் முற்பிறப்பையும்.
உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்
99
(L0600CLD. 26: 32)
(நாலடி.58)
என்பதில் மறுமையையும், உம்மைச்சொல் உணர்த்துதல் காண்க. செய்யும் என்பது பின்பு பாலீறு பெற்று, செய்யுமான்-செய்யு வான்-செய்வான் எனத் திரிந்தது. இம் முறையில் அமைந்த மூவிட ஐம்பால் வினைமுற்றுகளாவன:
தன்மை ஒருமை:
(செய்யுமேன்)-செய்யுவேன்-செய்வேன்-செய்வென் -செய்வன்-
செய்வல்.
பன்மை:(செய்யுமேம்)-செய்யுவேம்-செய்வேம்-செய்வெம்.
(செய்யுமாம்)-செய்யுவாம்-செய்வாம்-செய்வம். (செய்யுமோம்)-செய்யுவோம்-செய்வோம்.
முன்னிலை ஒருமை:
செய்யுமீ-செய்யுமே (செய்மே)-செய்மை-செய்வை-செய்வாய்
பன்மை: (செய்யுமீர்)-செய்மீர்-செய்வீர்
படர்க்கை-ஆ-பா:
(செய்யுமான்)-செய்மான்-செய்வான் -செய்வன்-செய்மான்-
செய்மன்
ப.பா:
(செய்யுமாள்)-செய்மாள்-செய்வாள்-செய்வள்-செய்மாள்-
செய்மள்
ப.பா:
(செய்யுமார்)-செய்மார்-செய்வார்-செய்வர்-செய்மார்-
செய்மர்
ஒ.பா:
(செய்யுமது)-செய்மது-செய்வது
பல.பா:
(செய்யும)-செய்ம-செய்வ