உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

தமிழ் வரலாறு






(உண்ணும)-உண்ணுவ

(நடக்கும)-நடக்குவ-நடப்ப

செய்மார் என்னும் பலர்பால் எதிர்கால பிற்காலத்தில் முற்றெச்சமாகவே ஆளப்பெற்றது. "மாரைக் கிளவியும் பல்லோர் படர்க்கை காலக் கிளவியொடு முடியும் என்ப எ- -டு: உண்மார் வந்தார்.

99

வினைமுற்று,

(தொல்.692)

“என்மரும் உளரே” என்னும் நன்னூல் தொடரில் (421) உள்ள என்மர் என்னும் சொல், செய்மர் என்னும் வாய்பாட்ட தாகும்.

"என்மனார் புலவர்” என்னும் தொல்காப்பியத் தொடரில் (6) உள்ள என்மனார் என்னும் சொல், மகனார் என்னும் உயர்வுப் பன்மைப் பெயர்போல் ஆரீறேற்ற செய்மன் என்னும் வாய்பாட்டுச் சொல்லாய், என்ப என்னும் பொருளில் வழக்கம்பற்றி வந்த காலவழுவமைதி.

செய்ப என்னும் பலர்பால் எதிர்கால வினைமுற்று, செய்வ என்னும் பலவின்பாற் சொல்லினின்று திரிக்கப்பெற்றதாகும். வகரத்திற்கு இனமான பகரம், சிறுபான்மை வகரம்போற் ககரத்திற்குப் போலியாக வரும்.

எ-டு: இறக்க-இறப்ப. விழிக்க-விழிப்ப

செய்யுமார் என்னும் பலர்பால் வினைமுற்று வினையால ணையும் பெயராகும்போது செய்யுமோர் என்றுந் திரியும்.

எ-டு: "வேற்றுமை தெரிப உணரு மோரே.

99

"மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே"

(தொல்.580)

(புறம்.297)

செய்வேன் என்னும் தன்மையொருமை எதிர்கால வினை முற்று, போலிவகையில் செய்கேன் என்று திரியும்.

வ-க, போலி.ஒ.நோ: சிவப்பு-சிகப்பு, துவர்-துகிர், ஆவா-ஆகா இடைச்சொல்).

செய்கேன் என்னும் வடிவில் ஈறு நீங்கியபின் எஞ்சி நிற்கும் செய்கு என்பதும், தன்மையொருமை வினைமுற்றாய் ஆளப் பெற்றது. அது செய்கும் என உம்மீறு பெற்றுப் பன்மை யாயிற்று. வை யிரண்டும் முற்றாயும் முற்றெச்சமாயும் வரும்.

முற்று: செய்கு = செய்வேன், செய்கும்=செய்வோம். முற்றெச்சம்: செய்குவந்தேன், செய்கும் வந்தோம்.