உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

4. நூலமைப்புச் சிறப்பு மிக்கது

பாவாணர் நோக்கில் பெருமக்கள்

மக்கள் வாழ்வுபற்றிய அனைத்துச் செய்தியும் அடங்கும் நாற் பொருளுள்ளும் வீட்டை அறத்துள் அடக்கி முப்பாலாக்கி, நானூறு துறை கொண்ட அகப்பொருளை இருபத்தைந்து துறையாக ஒடுக்கிப் பனை நிழலைக் காட்டும் பனித்துளிபோல் பெரும் பொருள் விரியச் சுருங்கிய சொல்லமையும் குறட்பாவைக் கையாண்டு, அதிகாரந்தொறும் பப்பத்துக் குறள் கொண்ட ஓரியலமைப்புப் பகுதிகளையெல்லாம் ஆற்றொழுக்காக ஒழுங்குபடுத்தி வலம்புரி முத்துகள் பெய்த பொலம்புரிச் சிமிழ்கள்போல் விழுவிய கருத்துகள் கெழுமிய 1330 குறள்களையும் அணிபெறத் தொகுத்து, நால்வகை யரண்போன்ற கடவுள் மழை முனிவன் அறம் என்னும் நாற்பொரு ட் பாயிரத்தைச் சேர்த்துத் 'திருக்குறள்’ என்னும் அன்மொழித்தொகைப் பெயர் தெய்வத் தன்மையைக் காட்டி என்றும் நிலவ, திருவள்ளுவர் இயற்றிய உலகத் திருவாய்மொழி இதுவரை எந் நாட்டிலும் இயன்றிராத பொத்தகப் புதுமையே.

5. ஒப்பற்ற உவமைச் சிறப்பினது

எ-டு:

உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்."

(குறள். 1302)

தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு."

(6029 1107)

களித்தானைக் காரணங் காட்டுதல் நீருட்

குளித்தானைத் தீத்துரீஇ யற்று."

(60 929)

தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையி னிழிந்தக் கடை.

"வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு.

மகராசனார் திருவள்ளுவர் வரலாறு வரைவுத் திறன்

திருக்குறள் இயற்றப்பட்ட சூழ்நிலை தெரிவித்தல்.

(ஷை 964)

(ஷை 552)

2. திருவள்ளுவர் மனை வாழ்க்கையை இன்று நிகழ்வதுபோல் அகக்கண்முன் காட்டல்.

3. ஆராய்ச்சியைத் தூண்டுதல்.

4.

உலகப் பேரறிஞரொடு திருவள்ளுவரை ஒப்புநோக்கல்.

5. சில சிறப்புக் குறிப்புகளைச் சேர்த்தல்.