உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

3

தமிழிலில்லாத வடவெழுத்துகளிருப்பதனாலும், தமிழில் மொழிமுதலிடை கடைகளில் வராத எழுத்துகள் மொழி முதலிடை கடைகளில் வருவதனாலும், வடசொற்களை ஒருவாறு அறியலாம். தமிழறிவில்லாத மாணவர் தமிழாசிரியர் வாய்க்கேட்டே வடசொற்களை யறிதல் கூடும்.

2. மெய்யீறு

மொழிக்கு இறுதியில் மெய்யெழுத்தாய் வரக்கூடியது இடையின ரகரமே யன்றி வல்லின றகர மன்று.

உ-ம்: அவர், ஊர், குதிர், இடக்கர்

3. இணைமெய்

மொழியிடையில் இணைந்து (இசைந்து) வரும் இரு மெய்களில் முதன் மெய்யாயிருக்கக் கூடியது இடையின ரகரமே. வல்லின றகர மெய்யை யடுத்து வேறொரு மெய்யும் வருவதின்று.

உ-ம்: பிழை நேற்த்தி

முயற்ச்சி

திருத்தம்

நேர்த்தி

முயற்சி

குறிப்பு: கரம், காரம் என்னும் எழுத்துச் சாரியைகளிலும் காரம், காரன், காரி என்னும் பெயர் விகுதிகளிலும், தா, வா என்னும் வினைப்பகுதிகளின் திரிபுகளிலும் வருவது இடையின ரகரம்.

பிறவிடங்களை ஆசிரியர்வாய்க் கேட்டறிக.

உ-ம்:

இகரம், ஈகாரம்

இளக்காரம், அதிகாரன், அதிகாரி. தரவு, தருகிறான்; வரவு, வருகிறான்.

றகரம் வருமிடங்கள்

1. இரட்டித்தல்

இரட்டிக்குமிடமெல்லாம் வல்லின றகரமே. இடையின ரகரம் இரட்டிக்காது. உ-ம்: வெற்றி, அற்ற, கற்றோர், ஆற்றை

2. னகரமெய்யும் ஆய்தமும் அடுத்தல்

னகரமெய்க்கும் ஆய்தத்திற்கும் பின்வருவதெல்லாம் வல்லின றகரமே. உ-ம்: கன்று, சென்றான், பஃறி.

3. நிகழ்கால இடைநிலைகள்

கிறு, கின்று, ஆநின்று.

உ-ம்: இருக்கிறான், எழுகின்றான், ஓடாநின்றான்.

4. இணைக்குறின் மொழியல்லாத

வருவது வல்லின றகரம்

உ-ம்: காறு, களிறு.

சொற்களிலெல்லாம் உகரவீறு ஏறி