உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

வாழை + காய் = வாழைக்காய் - தோன்றல்

கல் + மலை = கன்மலை திரிதல்

விகாரப் புணர்ச்சி

மரம் + வேர் = மரவேர் - கெடுதல்

புணர்கின்ற இருசொற்கிடையில், 2ஆம் வேற்றுமை முதல் 7ஆம் வேற்றுமைவரை ஏதேனுமோர் வேற்றுமை வுருபு தொக்கேனும் வெளிப்பட்டேனும் வரின், வேற்றுமைவழிப் புணர்ச்சி யென்றும், அல்லாதவழி அல்வழிப் புணர்ச்சி யென்றுங் கூறப்படும்.

உயிரீற்றுப் புணர்ச்சி

உயிரும் உயிரும் புணர்தல்

உயிரோடுயிர் புணரும்போது, நிலைமொழி யீற்று இ, ஈ, ஐ என்னும் உயிர்களின் பின் யகரமெய்யும், ஏனை யுயிர்களின் பின் வகரமெய்யும், ஏகாரத்தின் பின் இவ் விருமெய்களும் (உடம்படுமெய்யாகத்) தோன்றும்.

உ-ம்:

வாழை + இலை + இலை = வாழையிலை -ய்

திரு + அடி = திருவடி வ்

ஒரே + இடம் = ஒரேயிடம் -ய்

சே + அடி = சேவடி – வ்

இப் புணர்ச்சியை அறிதற்கு ஆவன்னா, ஈயன்னா, ஊவன்னா, ஏயன்னா, ஐயன்னா, ஓவன்னா, ஔவன்னா என்னும் பண்டை யுச்சரிப்பைக் கவனிக்க. யான்னா வருமெழுத்தின் பின் யகர மெய்யும், வன்னா வருமெழுத்தின் பின் வகரமெய்யும் உடம்படுமெய் யாகு மென்றறிக. ஒரு நெடில் போன்றே அதன் குறிலும் புணரும்.

ஏகாரம் ஓரெழுத்துச் சொல்லா யிருக்கும்போதே வகர வுடம்படுமெய் பெறும். அதுவும் சிறுபான்மையே. உ-ம்: ஏ + அறை = ஏவறை.

சுட்டெழுத்தும் வினாவெழுத்தும் நாற்கணத்துடன் புணர்தல்

(வன்கணம், மென்கணம், இடைக்கணம், உயிர்க்கணம் என்பன நாற்கணமாகும். கணம் = இனம், கூட்டம்).

சுட்டெழுத்துக்களும் எகர வினாவெழுத்தும் உயிரோடும் இடையின மெய்யோடும் புணரின், இடையில் வகரந் தோன்றும்; உயிரொடு புணரின் வகரம் இரட்டிக்கும்; வல்லின மெல்லின மெய்களோடு புணரின் அவ்வம் மெய்கள் மிகும்.

அ + உயிர் = அவ்வுயிர்

அ + யானை = அவ்யானை

அ + ரகரம் = அவ்ரகரம்

அ + லகரம் = அவ்லகரம் அ + வழி = அவ்வழி அ + ழகரம் = அவ்ழகரம் அ + ளகரம் = அவ்ளகரம்

உயிர்

இடையின மெய்