உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

21

நகரம் ண்,ள் என்ற மெய்களுக்குப் பின்வரின் ணகரமாகவும், ன், ல் என்ற மெய்களுக்குப்பின் வரின் னகரமாகவும் இரு வழியிலும் திரியும்.

ளகரத்தொடு புணர்ந்து நகரம் ணகரமாகும்போது, அவ்ளகரமும்

ணகரமாகும்.

லகரத்தொடு புணர்ந்து நகரம் னகரமாகும்போது, அவ்லகரமும்

னகரமாகும்.

கண் + நீர் = கண்ணீர்

உ-ம்: ண் + ந = ண்ண கள் + நீர் = கண்ணீர் -ள் + ந = ண்ண

பொன் + நன்று = பொன்னன்று -ன் + ந = ன்ன

கல் + நன்று கன்னன்று

=

ல் + ந

=

ன்ன

மேற்கூறிய புணர்ச்சிகளுள், நிலைமொழி யீறு தனிக்குறிலை யடுத்த மெய்யா யிருந்தால்தான், புணர்ச்சியால் தோன்றிய இரு ணகரமும் இரு னகரமும் நிற்கும்; நெடிலை அல்லது பல வெழுத்துகளை யடுத்த மெய்யாயின் ஒரு ணகரமும் னகரமுங் கெடும்.

உ-ம்: தூண் + நெடிது = தூணெடிது

ஆள் + நலம் = ஆணலம்

பனங்கள் + நன்று = பனங்கணன்று

மான் + நன்று = மானன்

கால் + நான்கு = கானான்கு

ஒரு ணகரம் கெட்டது.

ஒரு னகரம் கெட்டது.

மகன் + நல்லன் = மகனல்லன்

ம் என்ற மெய் நகரத்தோடு புணரும்போது, தான் தனிக்குறிலை யடுத்த மெய்யாயின் நகரமாகத் திரியும்; நெடிலை அல்லது பலவெழுத்துகளை யடுத்த மெய்யாயின் கெடும்.

=

உ-ம்: வெம் + நீர் = வெந்நீர்

வேம் + நீர் = வேநீர்

பரம் + நெறி = பரநெறி

திரிபு

கேடு

குறிப்பு : தந்நகரமும் றன்னகரமும் ஏறத்தாழ ஒன்றுபோல் ஒலிப்பதால், அவற்றை ஒன்றிற்கு இன்னொன்றாக எழுதக்கூடாது. எழுதின் பொருள் மாறும். முந்நாள் = மூன்று நாள், முன்னாள் = முன் + நாள்

உ-ம்:

தன்னலம் = தன் + நலம், தந்நலம் = தம் + நலம்

தனிக்குறில் யகரமெய்யும் தனி ஐகாரமும்

தனிக்குறிலை யடுத்த யகர மெய்யின் பின்னும் தனி ஐகாரத்தின் பின்னும்

வரும் மெல்லினம் மிகும்.

உ-ம்: செய் + நன்றி = செய்ந்நன்றி

கை + மாறு = கைம்மாறு