உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

9.

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

ட,ற இரட்டித்த நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்கட்குப்பின்.

உ-ம்: ஆட்டுக்கால், கிணற்றுத்தவளை.

கேடுகாலம், பேறுகாலம், வீடுபேறு, நாடுகிழவோன் முதலிய தொடர்களில் ட,ற இரட்டியாமையின் வலி மிகவில்லை.

ஆறு என்னும் பெயர் எண்ணைக் குறிப்பின், வேற்றுமையினும் இரட்டியாது (ஆகவே இயல்பாய்ப் புணரும்); பிறவற்றைக் குறிப்பின் இரட்டிக்கும்.

உ-ம்: ஆறில் ஐந்தைக் கழி, ஆற்றில் இறங்கு, அவ்வாற்றால்

10. புணர்ச்சியில் வன்றொடரான மென்றொடர்க் குற்றிய லுகரங்கட்குப்

பின்

உ-ம்: இருப்புப்பாதை

11. ஐகாரச்சாரியை பெற்ற குற்றியலுகரச் சொற்கட்குப் பின்.

உ-ம்: பண்டைக்காலம், அற்றைக்கூலி,

ஒற்றைப்பனை, இரட்டைப்பிள்ளை

12. அத்து இற்றுச் சாரியைப் பெயர்கட்குப்பின்

உ-ம்: பட்டினத்துப்பையன், பதிற்றுப்பத்து

=

13. மு, எட்டு, பத்து, கோடி என்னும் எண்ணுப்பெயர்கட்குப் பின். உ-ம்: முக்கால், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கோடிக்கணக்கு. 14. உயிரையும் ய ர ழ மெய்களையும் இறுதியாகவுடைய நிலைமொழிக ளுள்ள தொகைமொழி (Compound word) களில்.

உ-ம்: கிளிக்கூண்டு,இடைச்சேரி, ஏப்புழை

வாய்க்கால், ஊர்க்குருவி, தமிழ்ச்சங்கம்

வலிமிகா இடங்கள் - Combination in which the Hard

consonants are not doubled

1. 3ஆம் வேற்றுமை ஒடு, ஓடு என்னும் உருபுகட்குப்பின்

உ-ம்: இராமனோடு பேசினான்.

2. 6ஆம் வேற்றுமைக்குப்பின்

சீதை கற்பு

எனது புத்தகம், என்னுடைய கை, என கால்கள்

3. அகரவீற்றுப் பல்வகைப் பெயரெச்சங்கட்குப் பின்

உ-ம்: வந்த பையன், வருகிற திங்கள், பெரிய பட்டினம், செய்யாத பையன், அல்லாத காலம்.