உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

காமம்மருவு

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

காமரு காமர், கிடங்கு - கிட்டங்கி, கிழவன் கிழான், கொள் கொம்பு – கொளுகொம்பு - கொழுகொம்பு, கோபாலம் – கோப்பாளம் (வழு), கோர் கோ, கோர்வை - கோவை, சார்த்து சாத்து, சீர்த்தி – கீர்த்தி, ஸ்மரணா சுரணை சுணை, சுருதி சுதி, சுமையடை திரு - ஸ்ரீ, சீ; துணை - தனை, எத்துணை

-

சும்மாடு, தமப்பன் தகப்பன், எத்தனை, நியமி - நேமி, பகுதி

பாதி, படாகை - பதாகை, பரிகாரி - பரியாரி; பறண்டு - பிறாண்டு, பெயர் - பேர், பெயரன்- பேரன், பெருமகன் - பெருமான் பெம்மான் - பிரான், பெருமாட்டி பிராட்டி, பேர்த்தி – பேத்தி, பொழுது – போழ்து – போது, மணவாட்டி - மணாட்டி, மணவாளன் - மணாளன், மயல் - மால், மருமகன் - மருமான்- மருகன், மருமகள்- மருமாள் - மருகி, மார்யாப்பு - மாராப்பு, மிகு - மீ, மிகுதி – மீதி, முகக்கூடு முக்காடு, முகட்டுப்பூச்சி - மோட்டுப்பூச்சி - மூட்டைப்பூச்சி - மூட்டை, முகனை - மோனை, மூஞ்செலி (மூஞ்சி + எலி) - மூஞ்சுரு - மூஞ்சூறு - மூஞ்சுறு, மேல் மே, மீ; மைந்தன் - மைஞ்சன் மஞ்சன், வரணம் வருணம், வாழ்நன் வாணன், விகிதம் - வீதம், வியர் - வேர், விழு - வீழ், விழுது - வீழ்து, (வெந்த + ஆணம்) – வெந்தாணம் - வெஞ்சாணம் - வெஞ்சணம் - வெஞ்சனம்; வேண்மகள் வேண்மாள், வேய்வு - வேவு.

இடப்பெயர் மரூஉ

-

அமராபதி – அமராவதி. அளகாபுரி - அளகை, ஆற்றூர் - ஆறை, உஜ்ஜயினி உஞ்சை, உறையூர் உறந்தை, எருசலேம் எருசலை, சாலேம், கரிவலம் வந்தநல்லூர் - கருவை, களத்தூர் களந்தை. காஞ்சிபுரம் காஞ்சி -கஞ்சி கச்சி, *காளிக்கட்டம்- கல்கத்தா (Calcutta), கும்பகோணம் குடந்தை குடமூக்கு, கைலாயம் - கைலை, கோயம்புத்தூர் கோவை. *கோழிக்கோடு கள்ளிக்கோட்டை, சனகாபுரம் - சனகை, *செங்கழுநீர்ப்பட்டு சென்னப்பபட்டினம் - சென்னபட்டினம்

தேவி, சேற்றூர்

செங்கற்பட்டு,

சென்னை, சேரன்மாதேவி - சேர்மா சேறை, சோழநாடு சோணாடு, சோழபுரம் - சோளபுரம், சோழன்வந்தான் - சோளவந்தான். தஞ்சாக்கூர் – தஞ்சை, தஞ்சாவூர் தஞ்சை திரிசிராப்பள்ளி - திரிசிரபுரம்) - திருச்சினாப்பள்ளி - திருச்சி, (திரு)ச்செந்தூர் செந்தில்; (திரு)நெல்வேலி நெல்லை; திருவாவடுதுறை துறைசை; திருவதங்கோடு திருவிதாங்கூர் - திருவாங்கூர்; துவாரகை துவரை; தொண்டைமான்நாடு - தொண்டைநாடு; நாகபட்டினம் நாகை; பட்டினம் பட்டிணம் - பட்டணம்; பல்லவபுரம் பல்லாவரம்; பாண்டவர் மங்கலம் பாண்டமங்கலம்; பாண்டியநாடு - பாண்டிநாடு; புதுச்சேரி - புதுவை; புத்தூர் - புதூர்; பூவிருந்தவல்லி - பூந்தமல்லி; பெண்ணாகடம் - பெண்ணாடம்; பெத்லகேம் பெத்தலை, பெத்தேல்; பொதியில் பொதியம் பொதிகை; மகாமல்லபுரம்

மகாபலிபுரம், மயிலாப்பூர் மயிலை: மலையமான் நாடு

மலாடு; மழவராயன் பட்டினம் – மழவை; மாயூரம் - மாயவரம்; விருதுநகர் - விருதை; வீரகேரளன்புத்தூர் வீரளம்புத்தூர்; வைகுந்தம்

-

வைகுண்டம்.

  • இக்குறியிடப்பட்டவை இப்போது வழக்கற்றவை.