உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல்லியல்

37

சில ஒன்றன்பாற் குறிப்பு வினைமுற்றுகள் அது, து என்னும் இரு விகுதிகளையும் ஏற்கும்.

உ-ம்:

அன்னது, அற்று (அன் + து); கண்ணது, கட்டு (கண் + து); தன்மையது, தன்மைத்து; தாளது, தாட்டு (தாள் + து); பாலது, பாற்று (பால் + து). ண்,ர்,ல்,ழ்,ள்,ன் என்ற மெய்யீற்று வினைப் பகுதிகள், புடைபெயர்ச்சியில் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உகரச்சாரியை பெற்றும் பெறாதும் வரும். வழக்கறிந்து கடைப்பிடிக்க.

உ-ம்:

நி. காலம்

உண்ணுகிறான், உண்கிறான் சோருகிறான், சோர்கிறான் சொல்லுகிறான், சொல்கிறான் அமிழுகிறான், அமிழ்கிறான் கொள்ளுகிறான், கொள்கிறான் தின்னுகிறான், தின்கிறான்

பெயரெச்சம்

எ. காலம்

உண்ணுவான், உண்பான்

சோருவான், சோர்வான்

சொல்லுவான், சொல்வான்

அமிழுவான், அமிழ்வான் கொள்ளுவான், கொள்வான் தின்னுவான், தின்பான்.

ஆன, ஆகிய, ஆய; போந்த, போதிய, போதுமான; போன, போகிய, போய,போந்த.

வினையெச்சம்

ஆய், ஆக (உ-ம்: விரைவாய், விரைவாக); ஆய், ஆகி; இருக்க, இருப்ப; என்று, என; செய்ய, செய; செய்யின், செயின்; தூய், தூவி; வர, வரற்கு, வருவதற்கு; வரின், வந்தால், வந்தக்கால்.

சில வினைகள் எதிர்மறையில் வலிமிக்கும் மிகாதும் இரு வடிவாய் நிற்கும். உ-ம்:

பெ.எ.

இராத, இருக்காத

இடைச்சொல்

வி.எ.

வி.மு.(ஒன்றன்பால்)

இராமல், இருக்காமல் இராது, இருக்காது

But- ஆயின், ஆனால்; Either... or - ஆவது, ஆகிலும், ஆயினும், ஆனாலும். ஆதல், ஆக, எனினும், ஏனும்.

சொன்மயக்கம் - Confusion of Words பின்வருஞ் சொற்களை ஒன்றோடொன்று மயக்குதல் கூடாது. அரிவாள், அறுவாள்.

பொருள்களைச் சிறிதாயரியும் வாள் அரிவாள். (அரிவாள்மணை) பொருள்களை அறுக்கும் வாள் அறுவாள். (வெட்டறுவாள்)