உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

43

கூறுமிடத்து, சோறு உண்டான், சாப்பிட்டான்; தண்ணீர் குடித்தான்; பலகாரம் தின்றான் என்று கூறல்வேண்டும்.

ஒருவனிடம் ஒரு பொருளைக் கேட்கும்போது, கொடு என்பது உயர்ந்தோன் சொல்; தா என்பது ஒத்தோன் சொல்; ஈ என்பது இழிந்தோன் சொல்.

X. இனிமை

Euphony

இழிசொல்லும் வழூஉச்சொல்லும் நீக்கிப் பெரும்பாலுந் தென் சொற்களால், ஓசையின்பம்பட இயல்பான மோனையெதுகை யமைத்தெழுதுவது இனிமையாகும். உ-ம்: “திருமயிலையில் ஒரு துளுவ வேளாளர்பால் விடப்பட்டு அவரால் வளர்க்கப்பட்டு வந்த மகவை (திருவள்ளுவரை)க் கண்டு, அவ் வேளாண் டலை வரின் உறவினர் “யாரோ இழிகுலத்தார் காமத்தாற் பெற்றுப்போகட்ட அகதிப் பிள்ளையை இவர் வளர்க்கின்றார். ஈதென்னை!” என்று பழி கூறாநிற்ப, அதற்கு மிக வருந்திய அச் செல்வர் அம் மகவைப் பிரிதற் காற்றாராய்த் தம் விளைபுலத்தில் உழுதொழில் செய்யும் பறைக்குடிகளுக்குக் குருவாயுள்ள ஒரு வள்ளுவனை அழைத்து, அவன் கையில் அதனை ஈந்து, “இதனைப் போற்றி வளர்ப்பாயாக எனக் கூறி, அவற்கு அதன்பொருட்டு ஆம் செலவுகட்கும் வேண்டும் பொருள் நல்கினார்.

- ஆசிரியர் மறைமலையடிகள்.

இனிமைபற்றிக் கவனிக்கவேண்டிய சில குறிப்புகள்:

1. சொற்களைப் பெரும்பாலும் புணர்த்தெழுதல்.

2. சில சொற்களின் பல்வடிவங்களில் இன்னோசை யுள்ளவற்றைக்

கொள்ளல்.

உ-ம்:

சொல்

இனியவடிவம்

அதனால்,என்ன,

செய்கிறான், செலவுகளுக்கு,

செய்யவேண்டும்.

அதனான், என்னை,

செய்கின்றான், செலவுகட்கு, செய்தல்வேண்டும்.

3. இயன்றவரை தென்சொற்களை அமைத்து எழுதல்.

4. சொற்சுருக்கம்.

உ-ம்: ஏற்கமாட்டா ஏலா.

xi. சுருக்கம்

-

Brevity

வேண்டாத சொற்களை விலக்கிப் பொருள் விளங்குமளவில் இயன்றவரை சுருக்கி யெழுதுவது சுருக்கமாகும்.

இரண்டுபேர் என்பது இருவர் என்றும், எவன் தேறுகிறானோ அவனுக்கு என்பது தேறுகிறவனுக்கு என்றும், வடக்கேயுள்ள ஒரு நாட்டை ஆட்சி செய்து