உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

கொண்டிருந்த ஓர் ஆரிய வமிசத்து மன்னன் என்பது ஒரு வடநாட்டையாண்ட ஆரிய மன்னன் என்றும் சுருக்கி யெழுதப்படும்.

அரைஞாண்கயிறு, அவைகள் என மிகைபடக் கூறலும் (redundancy), அவர்களுக்குள் அவன் தலைசிறந்தவன்; அவனுக்குச் சமானம் ஒருவருமில்லை எனக் கூறியது கூறலும் (tautology) குற்றமாகும்.

xii. தூய்மை

Purity

அயலெழுத்து, அயற்சொல், வழூஉச்சொல் முதலியவற்றை நீக்கித் தனித்தமிழ் எழுத்துகளாலுஞ் சொற்களாலு மெழுதுவது தூய்மையாகும்.

சிறப்புப்பெயராயின் அயலெழுத்தும் அயற்சொல்லுந் தழுவப்படும்.

உ-ம்: “சிறந்த தமிழ்ப் புலவருள் ஒருவராகிய கபிலர் தமது நண்பனாகிய பாரி என்னும் வள்ளல் தன் மகளிர் இருவரைத் துணையின்றி விட்டு மாண்டனனாக, அம் மகளிர்க்கேற்ற கணவரைத் தேடிக் கொடுப்பது தமது கடமை என்று அங்குமிங்கும் அலைந்து தேடினர். இது நிறைவேறாது போகவே, புலனழுக்கற்ற அப் புலவர், வடக்கிருந்து இவ்வாழ்வை நீத்தனர். வடக்கிருத்தல் என்னும் இச் செய்தி ஒருவரது நாணுடைமை புரைபட்டபொழுது உணவு நீக்கி உயிர் துறக்கும் ஓர் ஒழுக்கமாகும்." (பா.வே.மாணிக்க நாயகர்) - திரு. க. ப. சந்தோஷம் அவர்கள். xiii. இசைவு

Concord

எழுவாயும் பயனிலையும், அல்லது முற்பெயரும் (Antecedent) சுட்டுப்பெயரும், அல்லது முற்பெயரும் தற்சுட்டுப்பெயரும் (Reflexive Pronoun), அல்லது இயற்பெயரும் சிறப்புப் பெயரும் திணை, பால், எண் இடங்களில் ஒத்திருக்க வேண்டும்.

உ-ம்:

இராமன்

வந்தான்

சீதை

வந்தாள்

இராமர்

வந்தார்(உயர்வுப்பன்மை) எழுவாயும் பயனிலையும்

மக்கள்

வந்தார்கள்

மகன் அவன் - தன்

மகள் அவள் - தன்

ஒருவர் - அவர் – தம்

மக்கள் - அவர்கள் - தங்கள்

முற்பெயரும் சுட்டுப்

பெயரும் தற்சுட்டுப்பெயரும்.

சிறப்புப்பெயரும் இயற்

ஆசிரியன், பாரத்துவாசி, நச்சினார்க்கினியன்

பெயரும்.

உயர்திணையில், ஆண்பால் பெண்பால் என்னும் இருபாற்பெயரும்

உயர்வுப்பன்மை விகுதியேற்கும்.

உ-ம்:. அரசர் வந்தார், அரசியார் வந்தார்.