உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

49

உ-ம்: இருகண்ணுஞ் சிவந்தன, மூவுலகுந் தொழும் முனிவன். உம்மைத்தொகை : உயர்திணைப் பெயர்த்தொடர்கள் உம்மைத் தொகையாய் வரும்போது, இறுதியிற் பலர்பால் விகுதிபெறும்.

உ-ம்: கபிலபரணர், சேரசோழபாண்டியர்.

உயர்திணைப் பெயர்கள் உலக வழக்கில் வழங்கிவரும் இணைமொழி களாயின், இறுதியிற் பலர்பால் விகுதி பெற்றும் பெறாதும் வரும்.

உ-ம்: தாய்தந்தை, தாய்தந்தையர்.

அஃறிணைப் பெயர்கள் உம்மைத் தொகையாயின், இறுதியிற் பல வின்பால் விகுதி பெற்றதும் பெறாதும் வரும்.

உ-ம்: இராப்பகல், இராப்பகல்கள்; காய்கறி, காய்கறிகள்.

4. வினாமரபு

-

Principles regarding Questioning

ஒரு பொருளை வினாவும்போது, அப் பொருளைக் குறிக்குஞ் சொன்மேல் வினாவெழுத்திருத்தல் வேண்டும்.

உ-ம்: இராமனா வந்தான்? - ஆள்

இராமன் நேற்றா வந்தான்? – காலம்

ஐயமும் சினமும் பற்றிய வினாவில், முறையே சிறிதறியப்பட்ட பொருளும் உண்மைப்பொருளும் முன்னர்க் கூறப்படல் வேண்டும்.

உ-ம்: அது மனிதனா? மரமா? -ஐயம்

நீ மனிதனா? மாடா? - சினம்

ஒரு பொருளைப்பற்றி உடன்பாட்டுச் சொல்லும் எதிர்மறைச் சொல்லும், அல்லது நன்மைச் சொல்லும் தீமைச் சொல்லும் அடுத்த வினாவாய் வரின், உடன்பாட்டுச் சொல்லும் நன்மைச் சொல்லும் முன்னர்க் கூறப்படும்.

உ-ம்: தமிழ்நாட்டிற்கு இந்தி வேண்டுமா? வேண்டாவா? எந்திரத்தினால் நன்மையா? தீமையா?

ஒரு வாக்கியம் எந்தெந்த, என்னென்ன என்று தொடங்கினால், அதன் பிற்பகுதியும் அந்தந்த, அன்னன்ன என்று இரட்டித்திருத்தல் வேண்டும். அந்த, அன்ன என்று ஒற்றித்திருப்பது தவறு.

5. நடை – Style

உரைகள் சொன்னிலையும் இலக்கணவமைதியும்பற்றிப் பலநடையாகச் சொல்லப்படும்.

1. வெள்ளை நடை

.

உ-ம்: ஒரு செலவாளி ஒரு சிக்கனக்காரனைக் கடன் கேட்டான். “நீ எப்படிக் கடனைத் தீர்ப்பாய்” என்று சிக்கனக்காரன் கேட்டதற்கு, “என் மாதச்