உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

உ-ம்:

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

உயர்ந்தோர் பிறர் குணங்களையே எடுத்துக் கூறுவர்; தாழ்ந்தோர் பிறர் குற்றங்களையே எடுத்துக் கூறுவர். இங்ஙனமன்றி,

உயர்ந்தோர் பிறர் குணங்களையே எடுத்துக் கூறுவர்; பிறர் குற்றங்களையே தாழ்ந்தோர் எடுத்துக் கூறுவர், என்பது ஒருசார் வழுவாகும்.

2. பாகியமைப்பு Stucture of Paragraph

-

ஒரு பாகி ஒரே ஒரு குறிப்பை, அல்லது கருத்தைத் தழுவியதாய் எவ்விதத்தும் காற்றாளில் ஒரு பக்கத்திற்கு மிகாததாயிருத்தல் வேண்டும் பாகிப்பொருள் (Theme of Paragraph) முதலிலேனும் இடையிலேனும் கடையிலேனும், குறிப்பாகவேனும் வெளிப்படையாகவேனும் இருக்கலாம். முதலிலிருப்பதும் வெளிப்படையாயிருப்பதும் சிறப்பாகும். பாகிப்பொருள் பெயராய்மட்டுமல்லாது முழுவாக்கியமா யிருத்தல்வேண்டும். ஒரு பாகி ஒரு வாக்கியமாயேனும் பலவாக்கியங்களாயேனு மிருக்கலாம்; பத்துவரிக்கு மேற் பட்டதாயின் பலவாக்கியங்களா யிருத்தல் நலம். பாகியைச் சிலர் பத்தியென்பர்.

3. உம்மைத்தொடர் - The Conjunction 'உம்' எண்ணும்மை : பல சொற்கள் அல்லது சொற்றொடர்கள் உம்மைச் சொல்லால் இணைக்கப்படின் சொற்றொறும் அல்லது சொற்றொடர் தொறும் உம்மை வேண்டும்.

உ-ம்: அறமும் பொருளும் இன்பமும் வீடும்.

ஒரு வாக்கியத்தில் உம்மை யேற்று ஒரு முடிபு கொள்ளும் சொற்கள் அல்லது சொற்றொடர்கள் எல்லாம், ஒரு வடிவினவா யிருத்தல் வேண்டும். (இங்கு ஒருபோகமைப்பை நினைக்க).

உ-ம்: பாண்டித்துரைத் தேவர் ஓர் அரசரும் புலவரும் வள்ளலு மாயிருந்தார்.

ஒட்டக்கூத்தர் குலோத்துங்கச் சோழனுக்கு ஆசிரியராயும் அமைச்சராயும் புலவராயு மிருந்தார்.

ஆசிரியராயும் அமைச்சருமாய் என்பது தவறு.

ஐயவும்மை : சிலவிடத்து உம்மைச்சொல் ஆவது (either... or) என்னும் பொருள்பட வருவதுண்டு. ஐயவும்மையாகும்.

உ-ம்: புகைவண்டி முன்னும் பின்னும் போகும்.

அங்ஙனம் வருவது

முற்றும்மை : ஒருவகுப்புப் பொருள்கள் எல்லாவற்றையுங் குறிக்கும்

போது உம்மை கொடுத்துக் கூறவேண்டும்.