உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

51

சொல் உடன்கற்றுப் பழமையும் பயிற்றியும் பண்பும் நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையார், பற் பன்னூறாயிரவர் கண்ணும் மனமும் கவரும் ஒண்ணுதன் மகளிர் தற்சூழத் தாரகை நடுவண் தண்மதிபோலச் செல்வாளென்பது முடிந்தது.

8. இலக்கிய நடை

-

99

இறையனாரகப் பொருளுரை

உ-ம்: “ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து, நஞ்சுண்டு சாவலென்னும் உள்ளத்தளாய் நஞ்சு கூட்டிவைத்து, கூட்டிவைத்து, விலக்குவாரில்லாத போழ்துண்பலென்று நின்றவிடத்து, அருளுடையானொருவன் அதனைக் கண்டு அவளைக் காணாமே கொண்டுபோ யுகுத்திட்டான். அவளுஞ் சனநீக்கத்துத்கண் நஞ்சுண்டு சாவான் சென்றாள் அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவன் அக் களவினான் அவளை உய்யக்கொண்டமையான் நல்லுழிச் செல்லும் என்பது.

99

இறையனாரகப் பொருளுரை

கொடும்புணர், தற்சம மணிப்பவளம், கொச்சை என்னும் இம்மூன்று நடைகளும் வியாசத்திற் கேலா.

கொடுந்தமிழ் நடை அதற்குரிய திசைக்கு அல்லது நாட்டிற்கு ஏற்கும். எதுகை நடையும் இலக்கிய நடையும் தமிழறவு சிறந்தாரால் தழுவப்படுவன.

6. வழக்கியல்

i. தகுதிவழக்கு (Euphemism & Conventional Terms)

இதை இலக்கண நூல்களுட் கண்டுகொள்க.

-

ii. திசை வழக்கு Provincialism

சில பொருள்கட்கு வெவ்வேறு திசைகளில், அல்லது இடங்களில், வெவ்வேறு சொற்கள் அல்லது சொற்றொடர்கள் வழங்கி வருகின்றன. அவ்வவ்விடங்களில் அவ்வவ் வழக்கையே தழுவல் வேண்டும்.

உ-ம்.

நெல்லை

காணாமற்

போயிற்று

பதநீர்

தஞ்சை

கெட்டுப்

போயிற்று

பதநீர்

சென்னை

காணாமற்

போயிற்று

பனஞ்சாறு

வடார்க்காடு

தாரைவார்த்து

போயிற்று

தெளிவு

iii. இழிவழக்கு

-

Slang Usage

பெண்சாதி, வெஞ்சனம், மச்சான், அடித்துக் கொளுத்திவிட்டான், வெளுத்துவாரிவிட்டான், அலசிவிட்டான், கம்பியை நீட்டிவிட்டான், அந்தப் பருப்பு