உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




52

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

இங்கே வேகாது முதலிய இழிவழக்குச் சொற்களையும் சொற்றொடர்களையும் விலக்கல் வேண்டும்.

iv. அயல் வழக்கு

-

Foreign Idioms

சில மாணவரும் பெரியோரும் ஆங்கில வழக்கைத் தழுவித் தமிழ் பேசுகின்றனர். தமிழுக் கொவ்வாத இடமெல்லாம் அது வழுவாகும்.

பிழை

விளையாட்டில் நன்றாய்ச்

செய்தார்கள்.

அப்பியாசம் எடுக்கவேண்டும்

திருத்தம்

விளையாட்டு நன்றாய்

விளையாடினார்கள்.

அப்பியாசம் செய்யவேண்டும்.

எல்லாரும் இக் கொண்டாட்டத்திற் எல்லாரும் இக் கொண்டாட்

பங்கெடுக்க வேண்டும்.

டத்திற் சேரவேண்டும்.

-

7. நிறுத்தக் குறிகள் Punctuation

நிறுத்தக் குறிகளின்றி எழுதல் கூடாது.

1. காற்புள்ளி

(Comma) வருமிடங்களாவன:

i. பொருள்களை எண்ணல்

உ-ம்: அறம், பொருள், இன்பம், வீடு

ii. ஓரெழுவாய்ப் பயனிலைகள்

உ-ம்: கந்தன் வந்தான், இருந்தான், எழுந்தான், சென்றான். iii. எச்சச் சொற்றொடர்

உ-ம்: வீடென்பது சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத் தாகலின், துறவறமாகிய காரணவகையாற் கூறப்படுவ தல்லது, இலக்கண வகையாற் கூறப்படாது.

iv. விலாசப் பெயர்கள்

உ-ம்: கனம் வாட்சன் அவர்கள், B.A. (Hons.),

மானேஜர்,

பிஷப் ஹீபர் உயர்தரப் பாடசாலை, புத்தூர், திருச்சிராப்பள்ளி

V. பட்டப் பெயரிடையீடு

உ-ம்: கனம் தியோடர் சாமுவேல் அவர்கள், M.A., L.T.

vi. எண் தானம்

உ-ம்: 1,00,000.

vii.உதாரணம்.

உ-ம்: உண்ட, உண்கின்ற, உண்ணும்.

viii. இணைப்புச் சொற்கள்

உ-ம்: அவற்றுள், ஆனால்,

Conjunctions.