உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

ix. திருமுக விளி உ-ம்: ஐயா,

X. இணைமொழிகள்

53

உ-ம்: நல்லவன் கெட்டவன், செல்வன் ஏழை, இளைஞன் முதியன் என்று பாராதவன்.

xi. நெடுந்தொடரெழுவாய்.

உ-ம்: செந்தமிழாக்கங் கண்ணுங் கருத்துமாய்ப் பேணும் ஒரு புலவர், வடசொல் வழங்குவதற்கோர் காரணம் வேண்டும்.

xii. இடைப்பிறவரல் (இங்கு முன்னும் பின்னும் குறிவரும்)

உ-ம்: அரசன், எப்படியிருந்தபோதிலும், மனிதன்தானே.

xiii. மறுத்துக்கூறும் வாக்கியப்பகுதி.

உ-ம்: அது அறியாமையன்று, கவலையீனமே. xiv. வாக்கிய வுறுப்பாய் வரும் மேற்கோள். உ-ம்: “அன்பே சிவம்” என்றார் திருமூலர்.

குறிப்பு: காற்புள்ளி இருக்குமிடத்துப் புணர்ச்சியிராது; புணர்ச்சி யிருப்பின் காற்புள்ளி யிராது.

2. அரைப்புள்ளி (Semi colon) வருமிடங்களாவன:-

i. ஒரே யெழுவாயின் பல வினைக்குறை வாக்கியங்கள்.

உ-ம்: இயந்திரம் உழவுத்தொழில் செய்கிறது; மாவரைக்கிறது; இடம் பெயர்விக்கிறது; போர் செய்கிறது; இன்னும் எத்துணையோ வினைகளைச் செய்கிறது.

ii. ஒப்புநோக்காய் வரும் புணர்வாக்கியம்.

உ-ம்: அறிவுடையோர்

ஆரவாரிப்பர்.

அமைந்திருப்பர்;

3. முக்காற்புள்ளி (Colon) வருமிடங்களாவன:

i. தலைப்பு

உ-ம்:

சார்பெழுத்து:

ii. அதிகார எண்

உ-ம்: மத்தேயு 8:6

iii. தன் விலாசத்தில் நகர்ப்பெயர்.

உ-ம்: எடின்பரோ: 339, ஹைரோடு.

iv. ஒப்புநோக்காய் வரும் பெரும்புணர் வாக்கியம்

அறிவிலிகள்

உ-ம்: கல்வி வெள்ளத்தாலழியாது; நெருப்பால் வேகாது; திருடரால் திருடப்படாது; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்க நிறையும்; செல்வமோ