உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

வெள்ளத்தாலழியும்; நெருப்பால் வேகும்; திருடரால் திருடப்படும்; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையும்.

4. முற்றுப்புள்ளி (Full Stop) வருமிடங்களாவன:

i. வாக்கிய முடிவு.

ii. விலாச முடிவு.

iii. வாக்கியவுறுப்பாய் வராத மேற்கோண் முடிவு.

iv. தலைப்பு.

V. சொற்குறுக்கம்

Abbreviation.

உ-ம்: கி.மு.,S.M. மல்லையா B.A., B.L.

vi.பிரிவும் மணியும் குறிக்கும் எண்.

உ-ம்: 1., 2.30 (2 1/2 L0600fl)

vii. கையெழுத்து.

உ-ம்: T.G நாகலிங்கம் பிள்ளை.

viii. தனித்து நிற்குஞ் சொல்.

5. வினாக்குறி - Note of Interrogation

ஒரு வினா வாக்கியம் முற்றுவாக்கியமாயும் தற்கூற்று (Direct Narration)வாக்கியமாயுமிருப்பின், இறுதியில் வினாக்குறி பெறும்; அயற்கூற்று

(Indirect Narration)

வினாக்குறிபெறாது.

உ-ம்:

வாக்கியமாயும்

புணர்ச்சி பெற்றதாயுமிருப்பின்

i. அது என்ன?, "நீ வருகிறாயா?” என்று கேட்டான்.

ii. நான் வருவேனாவென்று கேட்டான்., நீ வருகிறாயாவென்று கேட்டான்.

6. வியப்புக்குறி - Note of Exclamation

வியப்பு வாக்கியமும் வினாவாக்கியம்போன்று, முற்றுவாக்கியமாயும் தற்கூற்று வாக்கியமாயு மிருப்பின் வியப்புக்குறி பெறும்; புணர்ச்சிபெறின் வியப்புக்குறி பெறாது. (வியப்புக்குறியே விளிக்குறியும்.)

உ-ம்: என்னே இதன் பெருமை!,

‘என்னே இதன் பெருமை!” என்றான். என்னே யிதன் பெருமை யென்றான.

7. மேற்கோட் குறி - Quotation Marks or Inverted Commas

இரட்டைக்குறி வருமிடமாவன:

i. தற்கூற்று.

உ-ம்: "நான் வருவேன் என்றான்.