உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

viii. தன் கருத்துரைத்தல்.

57

உ-ம்: இத்தாலியர் ஆயிரக்கணக்கான எத்தியோப்பியரை நச்சுக் காற்றாற் கொன்றனர் என்ன அநியாயம்!

ix. இடைநிறுத்தம் அல்லது சடுதியான கருத்துமாற்றம்.

உ-ம்: என் தந்தையார்மட்டு மிருந்திருந்தால்

சொல்லி என்னபயன்?

x. தொகுத்துக் கூறல்.

அதையின்று

உ-ம்: மாணவர், ஆசிரியர், சேவகர், அலுவலாளர் - எல்லா வகுப்பாரும் வந்திருந்தார்கள்.

xi. இடையளவு

உ-ம்: அதிகாரம் 8 - 10

11. வரலாற்றுக் குறி

உ-ம்:

மிக்கோன் உலகளந்த வரலாறு:-

ஊறு (ஸ்பரிசம் ) எண்வகைப்படும. அவையாவன:-

12. தொகைக்குறி - Apostrophe.

உ-ம்: 8-10, 35.

13.மேற்படிக்குறி

உ-ம்: பாடம் படித்தான் 2-ம் வேற்றுமைத் தொகை. பாடத்தைப் படித்தான் 2-ம் வேற்றுமைத் விரி.

14. விடுபாட்டுக்குறி

ஒரு மேற்கோளில், வேண்டாத பகுதி விடப்படும். அது ஒரு புள்ளி வரிசையாலாவது உடுக்குறி வரிசையாலாவது குறிக்கப்படும்.

உ-ம்:

66

அகரமுதல...... உலகு

-

99

8. தற்கூற்று, அயற்கூற்று Direct and Indirect Speech ஒருவர் கூற்றை அவர் கூறியபடியே தன்மையிடத்திற் கேற்பக் கூறுவது தற்கூற்றாகும். அதைப் பொருள் மாற்றாது சொன்மாற்றிப் படர்க்கை யிடத்திற்கேற்பக் கூறுவது அயற்கூற்றாகும்.

தமிழில் தற்கூற்றே அயற்கூற்றினும் பெருவழக்காய் வழங்கும். தற்கூற்று ‘என்றான்','என்று சொன்னான்,' 'எனச் சொன்னான்' என்பன போன்ற சொற் சொற்றொடர்களாலும், அயற்கூற்று ‘ஆகச் சொன்னான்' என்பது போன்ற தொடராலும் முடிக்கப்படும்.

உ-ம்:

66

""

அவன் நான் வருவேன் என்றான் - தற்கூற்று. அவன் தான் வருவதாகச் சொன்னான் அயற்கூற்று.