உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

59

சட்டதிட்டம், சந்தி சதுக்கம், சிவமுஞ் சத்தியும், சின்ன பின்னம், சீதனம் சீராட்டு, சீரும் சிறப்பும், சீராட்டிப் பாராட்டி, சீறிச் சினந்து, சுகதுக்கம், சுற்றும் முற்றும்,

தடுத்து மடுத்து, தட்டாமல் தடுக்காமல், தட்டாமல் முட்டாமல், தாங்கித் தடுக்கி, தாயும் சேயும், தாரதம்மியம், தாவர சங்கமம், திருகல் முறுகல்; துணிமணி, துதி தோத்திரம், தேக்கித் தெவிட்டி, தோட்டம் துரவு,

நகை நட்டு, நயபயம், நரை திரை, நலம் பொலம், நல்லது பொல்லது, நல்லார் பொல்லார், நாடு நகர், நாட்டிலும் காட்டிலும், நாயும் பேயும், நாளுங் கிழமையும், நாளுங் கோளும், நிரந்து கலந்து, நைய்ந்து பிய்ந்து, நொண்டி சண்டி, நொண்டி நுடம், நோய் நொம்பலம்,

பட்டி தொட்டி, பயறு பச்சை, பயிர் பச்சை, பழக்க வழக்கம், பாங்கு பரிசனை, பாமரர் பண்டிதர், பாவபுண்ணியம், பாலுந்தேனும், பூர்வோத்தரம், பெற்றது பிறந்தது, பேரும் புகழும், பொட்டுப்பொடி, பொய்யும் புலையும், போக்குப்புகல், போற்றிப் புகழ்ந்து,

மட்டு மிதம், மண்மனை, மந்திர தந்திரம், மயக்கம் தியக்கம், முட்டி மோதி, முத்தி மோந்து, முள்ளும் முருக்கும், முற்ற முடிய,

வந்தனை வழிபாடு, வம்பு தும்பு, வற்றி வறண்டு, வாடி வதங்கி, வாய்க்கால் வரப்பு, வாரி வகிர்ந்து, வாழ்வு தாழ்வு, வானகமும் வையகமும், விண்ணும் மண்ணும், விதிவிலக்கு, விருந்து வேற்று, விருப்பு வெறுப்பு, வீரசூரம், வெட்கி விறைத்து, வேரும் தூரும், வேர்த்துப் பூத்து.

தாட் பூட், லொட்டு லொசுக்கு முதலியவை இழிவழக்காம்.

-

11. தொடர்மொழிகள் Idiomatic Phrases and Expressions

அகப்பற்றுப் புறப்பற்றுகளை அறவே ஒழித்து, அகண்ட பரிபூரண சச்சிதானந்தப் பிழம்பாகிய, அகத்து மகிழ்ச்சி முகத்து நிகழ்ச்சியாக, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு, அஞ்சினவனொழிய மிஞ்சின வனில்லை, அடிதண்டம் பிடிதண்டம், அடிதலை தடுமாற்றம், அடிமுதல் முடிவரை, அடிமை முதல் அரசன்வரை, அடியற்ற மரம்போல் படிமேல் விழுந்து, அண்டபிண்ட அகில சராசரங்கள், அமிழ்தினு மினிய தமிழ்மொழி, அரிதுணர் பொருளவற்றை எளிதுணர் பொருள வாக்கி, அரைக்காசிற்கும் வழியில்லாத அட்ட தரித்திரம், அழுத கண்ணுஞ் சிந்திய மூக்குமாய், அறம் பொருளின்பம் வீடு, அறிவு நிறை ஓர்ப்புக் கடைப்பிடி, அன்பு அருள் வாய்மை, அடக்கம் முதலிய நற்குணங்களை யுடையராய், அன்புள்ள அரசனும் அறிவுள்ள அமைச்சனும்;

ஆக்கவும் அழிக்கவும் வல்லவராய், ஆசு மதுரம் சித்திரம் வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் அசுவதாட்டியாகப் பாடக்கூடிய, ஆசைகாட்டி மோசஞ் செய்து, ஆடையாபரணாலங்கிருதனாய், ஆடையின்றி வாடையின்