உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்தி, ஆணவம் மாயை காமியங்கள், ஆண்டில் இளையராய் அறிவில் முதியராய்,ஆயிரம் பிறை கண்டவர், ஆலமுண்ட நீலகண்டன், ஆளுக்கேற்ற வேடம் காலத்திற் கேற்ற கோலம், ஆனந்தக் கடலில் ஆழ்ந்து or அமிழ்ந்து;

இகபர சுகங்கள், இடம் பொருளேவல், இட்டது சட்டம் வைத்தது வரிசை, இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயப்பதாய், இயன்றவரை முயன்று, இருகையினு மேந்திச் சிரசில் தாங்கிக் கண்ணிலொற்றி, இருபகட் டொரு சகடு, இருவினையொப்பு மலபரிபாகம், இலை மறை காய் போல், இளமையிலேயே இலக்கண விலக்கிய சித்தாந்தங்களையெல்லாம் முற்றுக் கற்று, இறைவனுக்கே வெளிச்சம், இன்னோரன்ன;

ஈர்ங்கை விதிராத உலோபி;

உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடல் பொருள் ஆவி மூன்றையும் ஒப்புவித்து, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து, உபகாரம் செய்தவனுக்கு அபகாரஞ் செய்யாமல், உப்புக் குழையாமல், உயிர் ஒடுங்கி உடல் நடுங்கி, உயிருக்குயிராய், உரப்பியுங் கனைத்தும் எடுத்தும் ஒலிக்கின்ற (வடமொழி யெழுத்துகள்), உலக வழக்குச் செய்யுள் வழக்கு, உலகமெல்லாம் ஒரு குடைக்கீழ் ஆண்டு, உவர்க்கடலன்ன செல்வர், உள்ளதைக் கொண்டு நல்லதைப் பண்ணி, உள்ளும் புறமும் ஒத்து, உற்று நோக்கி ஊகித்தறிந்து;

ஊணுறக்க மொழிந்து, ஊராருடைமைக்குப் பேராசை கொண்டு, ஊருக்குழைத்து ஊதாரித்தனமாய்;

எடுத்த காரியம் இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டு, எடுப்பார் கைப்பிள்ளையாய், எட்டிரண்டு மறியாத, எண்சாணுடம்பு ஒரு சாணாகக் குன்றி, எண்ணுக்குமெட்டா ஈசன், எந்நாட்டினு மினிய தென்னாட்டில், எல்லார்க்கும் நல்லவனாய், எல்லாம் வல்ல இறைவன்;

ஏராளமாயும் தாராளமாயும், ஏற இறங்கப் பார்த்து, ஏனோதானோ என்றிராமல், ஐயந்திரிபறக் கற்று;

கடல்மடை திறந்தாற் போலக் கவிபாடவல்லவராய், கட்டியணைத்து உச்சிமோந்து, கணக்கு வழக்கின்றி, கண்கவர் கவின்பெறு கட்டடம், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று, கண்ணீர் வார மெய்ம்மயிர் சிலிர்ப்ப, கண்ணீர்விட்டுக் கதறியழுது, கண்ணுக்குக் கண்ணாகவும் உயிருக் குயிராகவும், கண்ணைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளை கொண்டது, கண்மணிபோற் காத்து, கந்த மூல பலாதிகள், கயல்விழியுங் குயின்மொழியும்,கரிபரி தேர்கால், கல்வி யறிவொழுக்கங்களிற் சிறந்து, கற்றோர்க்கே யன்றி மற்றோர்க்கு விளங்காமல்;

காடிடையிட்டும் நாடிடையிட்டும், காடு வாவாவென வீடு போபோவென, காமவெகுளி மயக்கங்கள், காரியத்திற் கண்ணுங் கருத்துமா யிருந்து, காலாலிட்டதைக் கையாற்செய்து, காற்றினுங் கடுகிச் சென்று; குடிக்கக்