உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

61

கூழுக்கும் கட்டக் கந்தைக்கும் வழியற்று, குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர், குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கௌவியும் துழந்தும், குற்றத்தை நீக்கிக் குணத்தைக் கொண்டு, கூரிய அறிவும் சீரிய ஒழுக்கமும், கைகட்டி வாய்புதைத்து, கைக்கெட்டினது வாய்க்கெட்டாமல், வாய்க்கெட்டினது வயிற்றுக் கெட்டாமல், கைம்மாறு கருதாமல், கொடாக் கண்டனுக்கு விடாக்கண்டன், கொடியாரை நீக்கி அடியாரைக் காத்து, கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தாமே தமியராய், கோடானுகோடிச் சூரியச் பிரகாசமுள்ள;

சந்தன களப கஸ்தூரி, சம்பளமும் உம்பளமும் பெற்று, சாங்கோ பாங்கமாய், சாதுரியமாயும் மாதுரியமாயும், சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத்தாகலின், சிறுகக்கட்டிப் பெருக வாழ்ந்து, சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினர், சுருதியுக்தி யனுபவங்கட்குப் பொருந்த, சுவையொளி யூறோசை நாற்றம், செய்வனசெய்து தவிர்ப்பன தவிர்த்து, சொற்சுருக்கம் பொருட்பெருக்கம், சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்து, சொற்புத்தியும் சுயபுத்தியும் இல்லாமல், சொன்னயம் பொருணயம், சொன்னோக்கும் பொருணோக்கும் தொடை நோக்கும் நடைநோக்கும், சோற்றுக்குச் செலவும் பூமிக்குப் பாரமுமாய்;

தட்டுத்தடையின்றித் தாராளமாய்ப் பேசும்வன்மை, தட்டுக்கெட்டுத் தடு மாறி; தட்பவெப்பநிலை (சீதோஷ்ண ஸ்திதி), தமிழ்நாடுசெய்த தவப்பயனாகத் தோன்றி, தருமஞ்செய்யக் கருமமாயிற்றேயென்று, தலையுங் காலும் தெரியாது தம்முள்மயங்கி, தளர்நடை நடந்து மழலை மொழிந்து, தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், தனுகரண புவன போகங்கள், தன்னுயிர் போல் மன்னுயி ரெண்ணும் தனிவள்ளல், தான்றோன்றித் தம்பிரான்; துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனம், துள்ளித் திரிகின்ற காலத்தில் துடுக்கடக்கிப் பள்ளிக்கு வையாமல், தூப தீப நைவேத்தியங்கள்; தெற்கு வடக்குத் தெரியாமல், தென்றல் வீசித் தேன் சொரிந்து வண்டுபாடும் வளமரக்கா, தேனினுமினிய தென்மொழி, தொகை வகை விரி, தொல்காப்பியத்திற் பல்காற் பயின்று,தொல்காப்பியத்தும் தொல்காப்பியத்தும் பல்காற் பயின்று, தோற்றம் நடுவிறுதி;

நடை யுடை பாவனை, நலிந்தும் வலிந்தும் பொருள் கொண்டு, நாஸ்திகம் பேசி நாத்தழும் பேறி, நாத்தளர்ந்து வாய் குழறி, நாநயமும் நாணயமும், நால்வேதம் ஆறு சாஸ்திரம் பதினெண் புராணம் அறுபத்து நான்கு கலைஞானம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும், நாளைக்கொரு திறமும் வேளைக்கொரு நிறமும், நிலம் நீர் தீ வளி வெளி, நீர் சூழ்ந்த நில வுலகம், நீர் வளம் நில வளம் பொருந்திய; நுண்மாண் நுழைபுலம்; நெஞ்சாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தி, நெற்றியின் வேர்வை நிலத்தில் விழப் பாடுபட்டு;

பகை நட்பு அயலென்னும் முத்திறத்தும் ஒத்து, படை நாலும் புடைசூழ, படைப்புக்காப்பழிப்பு, பட்ட பாடும் கெட்ட கேடும், பட்டி மாடுபோற் கட்டுக் காவலின்றிச் சுற்றித் திரிந்து, பருத்த மேனியும் கருத்த கண்களும், பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டி, பார்த்த கண்ணும் பூத்துப்போய்;