உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




63

IV

அணியியல் - Rhetoric

உரைகளை அழகாகவும் பொருள்வலியோடும் உரைப்பதும் எழுதுவதும் அணியாகும். அது சொல்லணி பொருளணி என இருவகைப்படும்.

1. சொல்லணி- Figures of Speech relating to sound

(1) மோனை, (2) எதுகை, (3) மடக்கு கண்டுகொள்க.

இவற்றை இலக்கண நூல்களுள்

II. QUIT (1660fl- Figures of Speech relating to Sense

(1) தன்மை, (2) உவமை, (3) உருவகம், (4) வேற்றுமை இவற்றை இலக்கண நூல்களுள் கண்டுகொள்க.

(5) முரண் அணி.

பொருள்களை முரண் (மாறுபாடு) படக் கூறுவது முரண் அணியாம் அது மூவகைப்படும்.

i. எதிர்நிலை முரண் - Oxymoron

உ-ம்:

மெய்யானபொய், இது அதினும் சிறிது பெரிது.

ii. ஒரு பொருள் முரண் - Epigram

உ-ம்: அவன் ஆண்டில் இளைஞன், அறிவில் முதியன். iii. இருபொருள் முரண் – Antithesis

66

உ-ம்: காலையு மாலையுங் கைகூப்பிக் கால்தொழுதல்."

(6) உயர்வுநவிற்சி, (7) பலபடப்புனைவு, (8) வஞ்சகப்புகழ்ச்சி, (9) தற்குறிப் பேற்றம், (10) சுவை, (11) வேற்றுப்பொருள் வைப்பு. இவற்றை இலக்கண நூல்களுள் கண்டு கொள்க.

(12) நிகழ்ச்சியணி - Vision

ஓர் இறந்தகால அல்லது எதிர்கால நிகழ்ச்சியை, இன்று நிகழ்வது போலக் கூறுவது நிகழ்ச்சியணியாம்.

உ-ம்: கெத்செமனேயில் இயேசு சீடர்களைவிட்டுத் தனித்துச் செபம் பண்ணுகிறார். சீடர்கள் தூங்குகிறார்கள். இயேசு அவர்களைத் தட்டி எழுப்புகிறார். பெரிய பகைக்கூட்டம் வருகிறது. யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்கிறான். பகைவர் இயேசுவைப் பிடிக்கிறார்கள்.

ஒரு